வலி வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த மற்றுமொரு தொகுதி காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் விடுவிப்பு!

Friday, March 22nd, 2024

வலி வடக்கு பகுதியில் இராணுவத்தினரது பாவனையில் இருந்துவந்த மக்களின் மற்றுமொரு தொகுதி காணி நிலங்கள் மீளவும் மக்களிடம் வழங்கவதற்காக துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவினால் கையளிக்கப்பட்டுள்ளது.

மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தம் எனும் உறுதியான நிலைப்பாட்டில் மாறி மாறி வந்த அரசுகளுடன் பேச்சுக்களை நடத்தி படையினர் வசமிருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர் முயற்சியின் பலனாக பெரும்பாலான காணிகள் இதுவரை படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு தொகுதி காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டு ஜனாதிபதியால் அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்னிலையில் குறித்த காணிகளின் விபரங்கள் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதேநேரம் படையினர் வசமிருந்த காணிகளை மீண்டும் மக்களிடமே ஒப்படைக்க வருகைதந்த ஜனாதிபதி குறித்த பகுதியில் மரக்கண்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் , அலுவலக பிரதானியுமான சாகல ரத்னாயக்க , பாதுகாப்பு செயலாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

முன்பதாக பாதுகாப்பு காரணங்களுக்காக படையினரால் பயன்படுத்தப்பட்டுவந்த மக்களின் காணிகளின் மேலுமொரு பகுதியை விடுவிப்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் யாழ்ப்பாணத்துக்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகைதந்துள்ளார்.

கொழும்பிலிருந்து பாலாலி விமான நிலையத்திற்கு இன்று முற்பகல் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொன்னாடை போர்த்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி தலைமையில், பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள ஒருதொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன

இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பருத்தித்துறை, மந்திகை வைத்தியசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: