செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சுகாதார ஊழியர்களும் தொண்டராசிரியர்களும் சந்தித்து கலந்துரையாடினர்!

Sunday, April 29th, 2018

எமது மக்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கையை பெற்றுக்கொடுத்து அவர்களை நிம்மதியாக வாழவைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இந்தவகையில்தான்  தொழில்வாய்ப்பு நிரந்தரமாக்கப்படாமையால் நீங்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தர நாம் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகைதந்திருந்த சுகாதார ஊழியர்கள் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு உள்வாங்கப்படாத தொண்டராசிரியர்களுள் ஒருதொகுதியினர் தமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறுகோரி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்தனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

பல வருடகால யுத்தத்திற்கு முகங்கொடுத்து அதிலிருந்து மீண்டுவரும் எமது மக்களின் வாழ்வாதார முறை சிறந்ததாக அமைக்கப்படவேண்டும் என்பதற்காக நாம் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு நடைமுறைப்படுத்திக் காட்டியிருந்தோம்.

ஆனால் தற்போது அரசியல் மாற்றத்தால் அவ்வாறானதொரு சாதகமான நிலை எம்மிடம் குறைவானதாக இருப்பதனால் மக்களது பிரச்சினைகளை நிவர்த்திசெய்து கொடுப்பதில் தாமதங்கள் ஏற்படுகின்றது.

எனவே வெளிப்படையாகவும் மக்கள் நலன்களில் அக்கறையுடனும் இருந்து செயற்படும் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரங்களுக்கு தமிழ் மக்களின் அரசியல் அதிகாரங்கள் கிடைக்கப்பெறவேண்டும். அவ்வாறானதொரு சந்தர்ப்பம் உருவாக்கப்படும் பொதுதான் எமது மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்

அந்தவகையில் உங்களது பிரச்சினைகள் தொடர்பில் துறைசார்ந்தவர்களுடன் ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை காலக்கிரமத்தில் மேற்கொள்வேன் என்றும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே இந்த சந்திப்பி கலந்துகொண்டிருந்த சுகாதார ஊழியர்கள் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு உள்வாங்கப்படாத தொண்டராசிரியர்கள், தாம்  நீண்டகாலமாக ஊதியங்களைக் கூட எதிர்பாராது தாம் எமது சேவையினை மேற்கொண்டு வந்துள்ளதாகவும். அந்தவகையில்  நாம் இன்று மேற்கொள்ளும் தொழிலையே தமது எதிர்காலமாக நம்பியிருப்பதாகவும் குறித்த சந்தர்ப்பம் தமக்கு கிடைக்காது போனால் தமது குடும்பநிலை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்ததுடன் தமக்கு நிரந்தர நியமனங்களை பெற்றுத்தந்து சுபீட்சமான வாழ்க்கையை திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக செயலாளரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான றீகன், யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா  ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts: