அறம் சார்ந்து அரசியல் சமூக நீதிக்காக உழைத்த அமரர் தெணியானுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Tuesday, May 24th, 2022

ஈழத்தின் இலக்கிய பேராளுமைகளில் ஒருவரான தெணியான் அவர்களின் இழப்புச் செய்தியறிந்து துயரடைகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயாக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமரரின் மறைவு குறித்து விடுத்துள்ள அஞ்சலிக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அஞ்சலிக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

சுதந்திரமான இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும்,.நீதிக்காக குரல் எழுப்பும் மக்கள் மனங்களின் குரலாக அவைகள் ஒலிக்க வேண்டும்,..அரசியல் சமூக பொருளாதார மாற்றங்களை உருவாக்கஇலக்கியங்கள் பங்காற்ற வேண்டும்,.இத்தகைய எமது இலட்சிய கனவுகளுக்கு ஏற்றவாறு ஈழத்து இலக்கிய தளத்தில் தனித்துவமாக நின்று செயலாற்றிவர் அமரர் தெணியான் அவர்கள்,..

போரியல் இலக்கியங்கள் பலவும் மக்களின் அவலங்கள் குறித்து எதுவும் பேசாது வெறுமனே வீரப்பிரதாபங்களை மட்டுமே பேசி வந்த காலச்சூழல் ஒன்றில்,..போர்ச்சூழலிலும் அரசியல் சமூக நீதியை தன் உயிர் மூச்சாக கொண்டு மக்களின் சமூக அவலங்களை இலக்கியமாக்கியவர் அமரர் தெணியான் அவர்கள்.

ஈழத்தின் முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக,.. பொதுவுடைமை தத்துவத்தை உறுதியுடன் ஏற்றவர்களில் ஒருவராக,..இடதுசாரி முற்போக்கு செயற்பாட்டு சக்திகளை ஆழ நேசித்தவராக,..அந்தவகையில், எமது அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவு அளித்தவராக..இறுதி மூச்சு வரை உறுதியுடன் வாழ்ந்தவர்,..

அவரது கனவுகள் வெல்லும் காலச்சூழல் கனியட்டும்.அவரது படைப்பிலக்கியங்கள் எம்மிடை வாழ்வது போல் நினைவுகளும் நீடித்து வாழட்டும்,..

இழப்பின் துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர்,.உறவினர்கள், இலக்கிய நண்பர்கள், கல்விச் சமூகத்தினர் சகலருக்கும் ஆறுதல் கூறுகின்றேன்.

அமரர் தெணியான் அவர்களுக்கு ஆழ்மன அஞ்சலி மரியாதை என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது…

Related posts:


மக்களுக்கு பாதகம் ஏற்படும் செயற்றிட்டங்களை யார் முன்னெடுத்தாலும் அதற்கு நாம் ஒருபோதும் துணைபோக மாட்ட...
கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களூடாக மக்கள் நலன்களை முன்னெடுத்து  சாதித்துக் காட்டுங்கள் - கிளிநொச்சியில...
காணாமல் போனோரின் அலுவலகம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை  - எம்.பி. டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு...