வடக்கு கிழக்கு மக்களை அந்நியமாகவே பார்க்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, May 23rd, 2018

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களை அந்நியர்களாகவே பார்க்கின்ற போக்குகளை கொண்ட நீங்களே, அந்தப் பகுதிகளை பிரித்து கையாளுகிறீர்களே அன்றி, அவ்வாறு பிரிக்க வேண்டிய தேவை எமது மக்களுக்கு ஒருபோதும் கிடையாது என்பதை நான் இந்தச் சபையிலே வலியுறுத்திக் கூறுகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தேசிய சூழல் சட்டத்தின் கீழான 7 கட்டளைகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் –

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நீங்களே அப்படியொரு மாயையை உருவாக்கி, நீங்களே அதற்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். வேறு எதையுமே நீங்கள் செய்வதாக இல்லை.

எமது மக்களின் எந்தப் பிரச்சினையை எடுத்தாலும், உடனே இனவாத சாயம் பூசப்பட்டு, அதனை சுயலாப அரசியலாக்கப் பார்க்கிறீர்கள். அல்லது, அவ்வாறு ஆக்கப்படுகின்ற சுயலாப அரசியலுக்கு அச்சப்பட்டு, மௌனமாகி விடுகிறீர்கள். அன்றி, அந்தப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது பற்றி நீங்கள் சிந்திப்பதில்லை.

இன்று வடக்கிலே தொடர்கின்ற வறட்சிக்கு பெரிதும் காரணமாக இந்த சூழல் அழிப்பு நடவடிக்கைகளே காணப்படுகின்றன. தெற்கிலே, மலையகப் பகுதிகளிலே இயற்கை அனர்த்தங்கள் வருடந்தோறும் நிகழ்வதற்குக் காரணமும் இந்த இயற்கை அழிப்பு நடவடிக்கைகள்தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சூழல் பாதுகாப்பு என்பது கொழும்பு நகரில் குப்பை கொட்டாமல், ஏனைய பிரதான நகரங்களில் குப்பை கொட்டாமல் பார்த்துக் கொள்வது மட்டுமல்ல. முழு நாட்டினையும் பிரதிபலிக்கின்ற வகையில் அந்த ஏற்பாடுகள், வலுவுள்ளதாக மேற்கொள்ளப்படல் வேண்டும்

006

Related posts:

நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அடியவர்கள் சுதந்திரமாக வழிபட அமைச்சரவையில் தீர்மானம் - அமைச்சர் டக்ள...
உள்ளூர் ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்ய பூரண ஒத்துழைப்பு – ரின் மீனின் சில்லறை விலையும் நிர்ணயம்...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல...