இளையோரின் முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராட்டு!

Saturday, May 8th, 2021

கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளப்படுகின்ற நவீன முறையிலான நெல் நாற்று நடப்படும் செயற்பாட்டை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளையோரின் முயற்சிகளை பாராட்டி உற்சாகப்படு்த்தினார்.

குறித்த பொறிமுறையினால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதனால் களநாசினிப் பிரயோகம் மட்டுப்படுத்தப்படுவதுடன்  அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும் என்வும் உற்பத்திச் செலவு குறைவடைவதாகவும் தெரிவிக்கப்படுகி்றமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே கிளிநொச்சி, புதுமுறிப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள நன்னீர் இனப்பெருக்க தொட்டிகளை புனரமைக்கப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

தன்னார்வு தொண்டு நிறுவனமன சேவா லங்காவின் நிதியுதவியில் உருவாக்கப்பட்ட 30 தொட்டிகளைக் கொண்ட நன்னீர் மீன் இனப்பெருக்க தொகுதி, சீரான பராமரிப்பு இன்றி கைவிடப்பட்ட நிலையில், கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய நக்டா எனப்படும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையினால் 50 இலட்சம் செலவில் புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வளம் பாதிக்கப்பட்டு கடல் பாலைவனமாகின்றது - டக்ளஸ் தேவானந்தா
மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் உறுதியுடன் உழையுங்கள் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
சுய உற்பத்தித் துறையை ஊக்குவித்து மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை ஈட்டுவதே எமது இலக்கு – நாடாளுமன...