வடக்கு கிழக்கு கைத்தொழில் துறைக்கு இன்னொரு வாய்ப்பு – அமைச்சர் டக்ளஸின் கைகளில் தலைமை பொறுப்பு!

Tuesday, November 3rd, 2020

உள்நாட்டு உற்பத்திக் கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான  அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் அங்கமாக குறித்த குழு செயற்படவுள்ளது.

உள்நாட்டு கைத்தொழில் அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு செயற்படவுள்ள குறித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச, பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரன ஆகிய அமைச்சரவை பிரதிநிதிகளும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழு மாவட்ட ரீதியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதகமாக காணப்படுகின்ற கைத்தொழில்களை முன்னேற்றி நாட்டின் அபிவிருத்திக்கு வலுச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படவுள்ளது.

அதேபோனறு, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழு, வாழ்வாதார அபிவிருத்திக் குழு, கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழு போன்ற குழுக்கள் கிராமிய பொருளாத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 காரணமாக உலக பொருளாதாரம் மோசமான சரிவை சந்தித்துள்ள நிலையில்        உள்நாட்டு உற்பத்திகளில் தன்னிறவடைவதன் ஊடாக பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் முனைப்போடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிநடத்தலில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


குடாநாட்டில் முடங்கிக் கிடந்த கூட்டுறவுத் துறையை கடும் உழைப்பினால் தூக்கி நிறுத்தியவர்கள் நாம் - நாட...
அந்நியச் செலாவணியில் பெரும் பங்களிப்பு செய்யும் மலையக மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உறுதிசெய்யப்பட வ...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் எடுத்த அதிரடி...