கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் எடுத்த அதிரடி தீர்மானம்!

Thursday, February 15th, 2024

கிளிநொச்சி மாவட்டத்துக்கான  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றையதினம் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒரங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மாவட்டத்தில் இவ்வாண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக பிரதேச செயலக ரீதியில் முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதியை பெறும் முகமாகவே இந்த கூட்டத்தொடர்   இடம்பெற்றது.

குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டதுடன். மாவட்டத்தில் இடம்பெற்ற சட்டவிரோத மண் கடத்தல், போதைப்பொருள் பாவனை ஆகியவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அதன் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று முடிவுகளும் எடுக்கப்பட்டன .

இன்று காலை 09 மணிக்கு ஆரம்பமான குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலர் (காணி) திருமதி தனாஜினி இன்பராஜ் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இடம்பெற்ற கூட்டத்தில் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிறிதரன் ஆகியோரும்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: