தொண்டமனாறு மற்றும் உப்பாறு ஏரிகளில் 10 இலட்சம் இரால் குஞ்சுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் விடப்பட்டன!

Sunday, February 2nd, 2020

பருவ கால மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தொண்டமனாறு மற்றும் மண்டான் மற்றும் ஆவரங்கால் உப்பாறு பகுதி ஏரிகளில் 10 இலட்சத்து 60ஆயிரம் இரால் குஞ்சுகள் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் விடப்பட்டன.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று (02.02.2020) தொண்டமனாறு மற்றும் அவரங்கால் உப்பாறு ஏரிகளில் விடப்பட்ட இரால் குஞ்சுகள் இன்னும் மூன்று மாதத்தில் சராசரியாக ஒரு இறால் 40கிராம் எடை வரையில் வளர்ந்து இப்பிரதேசத்தில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஏறத்தாழ 20 கோடி வருமானமாக ஈட்டிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

Related posts:


மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
மாகாண மட்டத்தில் விளையா ட்டுக் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!
காலஞ்சென்ற இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருக்கு நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. அஞ்சலிமரியாதை!