மன்னார் சவுத்பார் கடல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Saturday, February 1st, 2020

நீண்டகாலமாக பள்ளிமுனை கடற்றொழிலாளர்கள் தமது கரைவலை பாட்டு தொழிலுக்காக பயன்படுத்திவந்த சுமார் 137 மீற்றர் கடற்பகுதியை தனியார் ஒருவர் சட்டவிரோதமாக கையகப்படுத்தி ஆடம்பர விடுதி ஒன்றை கட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் தமது தொழில் அழிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளதால் அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு மன்னார் சவுத்பார் கடல்தொழிலாளர்கள் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றையதினம் மன்னார் சவுத்பார் பகுதி கடல்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயும் முகமாக குறித்த பகுதிக்கு கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்தார்.
இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் இப்பகுதியை தனியார் ஒருவர் சட்டவிரோதமான முறையில் காணியை கையகப்படுத்தி ஆடம்பர விடுதி ஒன்றை கட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றார். அதுமடுமல்லாது அதற் முற்பகுதியில் உள்ள கரை வலைப்பாடு செய்யும் சுமார் 135 மீற்றர் நிலப்பரப்பையும் சட்டவிரோதமாக கையகப்படுத்தி சுற்றுலாத்தளம் அமைக்கும் முயற்சியையும் அவர் மேற்கொண்டுவருகின்றார்.
இதனால் கடல் தொழில் பாதிக்கப்படுகின்றது என கடந்த காலத்தில் பலதரப்பட்டவர்களிடமும் முறையிட்டும் பலனேதும் கிடைக்வில்லை. அத்துடன் சட்டத்தையும் துறைசார் அதிகாரிகளது கட்டளையையும் குறித்த தரப்பினர் உதாசீனம் செய்து வருகின்றனர்.

எனவே எமது தொழில் துறையை பாதுகாத்து எமது குடும்ப வருமானத்துக்கான வழிவகையினை காப்பாற்றி தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

குறித்த தரப்பினரது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் காலக்கிரமத்தில் துறைசார் தரப்பினருடன் பேசி தீர்வுகாண முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறு...
மணிவண்ணனின் தவறை அறியாத் தவறாக கருதி மன்னிப்பு வழங்குங்கள் - ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை...
நெல்லுக்கான சந்தை வாய்ப்பு பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ்!