பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016

நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மேலும் பல திட்டங்களை நாம் வகுத்து செயற்படுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. அந்த வகையில் நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்படல் வேண்டும். இதற்கான திட்டங்களை இந்த அரசு முன்னெடுக்கும் என எதிர்பார்ப்பதுடன், எமது விவசாயத் துறைக்கென ஒரு தேசிய பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும் எனவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தற்போது ஏற்பட்டுவருகின்ற காலமாற்றங்கள் காரணமாக காலபோக அறுவடைகளில் பெரும் பாதிப்பு நிலை ஏற்பட்டு வருகின்றன. எனவே இதற்கு முகம்கொடுக்க அரசு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறான நிலைகளில் விவசாய மக்களை பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கு உரிய நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதேவேளை உணவு உற்பத்திப் பற்றாக்குறைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுக்கவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளர்.

113

Related posts:


உள்ளளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்- டக்ளஸ்...
யாப்பியலாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளளனர் என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் - டக்ளஸ் எ...
ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்கின்றது சைக்கிள் கட்சி: அமைச்சர் டக்ளஸிடம் கஜேந்திரகுமார் தெரிவிப்பு!