வடக்கு மாகாண கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, October 28th, 2020

கொவிட் 19 காரணமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்குடனான விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், நடைபெற்று வருகின்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர்கள் ஆகியோருடன் கடற்றொழி்ல் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

கொறோனா காரணமாக கடலுணவுகளை வடக்கு மாகாணத்திற்கு வெளியே எடுத்துச் செல்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளமையினால், கிடைக்கின்ற அறுவடைகளை விற்பனை செய்து கொள்வதில் பிரச்சினைகள் எதிர்கொள்ளப்படுகின்ற நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பாக
ஆராயப்படுகின்றது.

குறிப்பாக, உற்பத்தி செய்யப்படுகின்ற கருவாடுகளை சதோச ஊடாக விற்பனை செய்வது தொடர்பாகவும், இறால், நண்டு, கணவாய் போன்றவற்றை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடி வருகின்றனர் –
L

Related posts:

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கமைவாக கிட்டங்கிப் பாலத்தை அமைப்பதற்கு இடைக்காலத் திட்டம் தயார்...
பாதைகள் மாறுகின்ற போதிலும், கொள்கை மற்றும் இலக்கு மாறாத வகையில் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிற்றேன் -...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் நாடாளுமன்ற உறப்பினர்கள் ஒத்துழைப்பார்கள். - அமைச்சர் டக்ளஸ...

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்...
மழை நீர் சேமிக்க பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்த...
இ.போ.சபையில் தற்காலிக அடிப்படையில் நிர்வாக பணிகளில் ஈடுபட்டுவந்த ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்களை வ...