அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – தீபாவளி தினத்தன்று மின் துண்டிக்கப்படாதென மின்சார சபை அறிவிப்பு!

Saturday, October 22nd, 2022


தீபாவளி தினத்தன்று நாடளாவிய ரீதியில் முழுமையான மின்சார விநியோகத்தினை வழங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிககை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமுலப்படுத்தப்பட்டு வருகின்ற  மின் வெட்டை எதிர்வரும் திங்கட் கிழமையான தீபாவளி பண்டிகையன்றும் வழமை போன்று  நடைமுறைப்படுத்துவதற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோருடன் நேற்று தொடர்பு கொண்டு, இந்துக்களினால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான வரலாற்றுக் காரணத்தை தெளிவுபடுத்தியதுடன், அன்றைய நன்நாளில் நாட்டை சில மணி நேரங்கள்  இருளில் மூழ்கடிப்பது பொருத்தமற்ற செயற்பாடு என்பதையும் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி மின்சார தடை அமுல்ப்படுத்தப்படாது என்பதை இன்று  இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. –

Related posts:


வடபகுதி  போக்குவரத்து சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவேண்டும் - நாடாளுமன்றில் ட...
தமிழரின் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தது இந்திய அரசு - இந்திய விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம் டக...
“பிரேக் டவுன்” வண்டி போன்று இருந்த நாட்டை ஓடக்கூடிய நிலைக்கு மாற்றியவர் ஜனாதிபதி ரணில் - அமைச்சர் டக...