வாழைச்சேனை மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கப் பிரதிதிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Friday, September 23rd, 2022


வாழைச்சேனை மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கப் பிரதிதிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில்,  இடம்பெற்ற இச்சந்திப்பில் கடற்றொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தினர்.

குறிப்பாக வி.எம்.எஸ் கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ள எல்.சி. டி உகரணத்தினால் தேவையற்ற அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும்,   மாற்றீடாக வானொலி தொடர்பு சாதன பொறிமுறையை உருவாக்கித் தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், கடற்றொழிலாளர்களிதும் நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே வி.எம்.எஸ். கருவி பொருத்தும் செயற்றிட்டத்தினை அமைச்சு முன்னெடுத்து வருவதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், அதனை பயன்படுத்துவதன் மூலம் கடற்றொழிலாளர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பகுதியில் சுமார் 475 படகுகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

‘இரண்டாவது பண்டாரநாயக்க’அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு...
மக்களின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு கட்சியூடான எமது செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும் - டக்ளஸ் ...
டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான் நம்பிக்கையுடன் முன்வந்தார் - பொதுஜன பொரமுன தேசிய மாநாட்டில் மஹிந்த ராஜப...

யாழ். மருத்துவமனையில் சிவர்களுக்கானதனிப்பிரிவுவேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள...
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தீவகத்தின் அபிவிருத்திக்கு விசேட நிதி ஒதுக்கீடு - அமைச்சர் டக்ளஸ்!
வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரைய...