யாழ். மருத்துவமனையில் சிவர்களுக்கானதனிப்பிரிவுவேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Wednesday, December 7th, 2016

தாதியர்கள்,மருந்தகர்கள்,ஆய்வுகூட  மற்றும் இயன்முறைமருத்துவக்  கற்கைகள் என்பன தற்போது பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தனியானபிரிவாக செயற்பட்டுவருகின்ற நிலையில்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அது மருத்துவபீடத்தின் கீழேயே இன்னும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. எனவே இதனை  தனியான ஒரு துறையாக ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 05 ஆம் திகதி போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டுஉரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிறுவர்களுக்கானதனிப் பிரிவுஅமைப்பதில் கௌரவஅமைச்சர் டாக்டர் ராஜிதசேனாரத்ன அவர்கள் காட்டிவருகின்ற அக்கறையை நான் வரவேற்கின்ற அதேநேரம், வடக்கு மாகாணத்திற்கென தனியானதொரு சிறுவர்களுக்கான மருத்துவ மனையை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் படியும்,

அதேநேரம்,தற்போதுஎமதுநாட்டில் 60 வயதுக்குமேற்பட்டவயோதிபர்களின் தொகையானது நூற்றுக்கு 12 வீதமாக இருப்பதாகவும், இது 2020ம் ஆண்டளவில் 20 வீதமாகஅதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறானநிலையில், இந்தவயோதிபப் பிராயத்தையுடையவர்கள் பல்வேறுவகையிலானநோய்களுக்குஆட்படக்கூடும் என்பதால், அதற்குப் பாரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவேண்டி ஏற்படுவதுடன், அதற்கெனவிஷேட கவனம் செலுத்தவேண்டியநிலையும் ஏற்படுகின்றது.

எனவே, தற்போது சிறுவர்களுக்கென தனியானபிரிவுகள் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப் படுவதுபோல், வயோதிபரக்களுக்கெனவும் தனியானபிரிவுகளை ஏற்படுத்துவதற்கும், நாட்டில் வயோதிபர்களுக்கென தனியானதொரு மருத்துவமனையை அமைப்பதற்கும், 75 வயதுக்கு மேற்பட்டோர்கள் தொடர்பில் விஷேட கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும்,

தற்போதுயாழ்ப்பாணம்,தெல்லிப்பளைபகுதியில் செயற்பட்டு வருகின்ற புற்றுநோய் மருத்துவமனையானது போதியவளப் பற்றாக்குறை மற்றும் போதிய பராமரிப்புகளின்றி காணப்படுவதால்,அதைமஹரகமபுற்று நோய் மருத்துவமனையைப் போன்றுமத்தியஅரசின் கீழ் கொண்டுவந்து, அதற்குப் போதியவசதிகளைஏற்படுத்திக் கொடுக்குமாறும், கௌரவசுகாதார அமைச்சர் டாக்டர் ராஜிதசேனாரத்னஅவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-4 copy

Related posts:

சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுகின்றார் - பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் அமைச்சர் ...
யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கு தனியார் முதலீட்டாளர்கள் கோரிக்கை - ஒத்துழைப்பு வ...
சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட நல நிதி கொடுப்பனவுகள் கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்க...

பொதுக் கட்டிடங்களில் கொரோனா நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜ...
மீன்பிடிப் படகுகளின் பயணப் பாதையை ஆழப்படுத்தி தருமாறு நீர்கொழும்பு பிரதேச கடற்றொழிலாளர்கள் அமைச்சர் ...
சட்ட விரோத மணல் அகழ்வு குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ...