யாழ். சமுர்த்தி அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – களச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வு!

Saturday, November 7th, 2020

சமுர்த்தி ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொவிட் 19 காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர்களின் செயற்பாடுகளுக்கு பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட சமுர்த்தி அலுவலகத்திற்கு திடீர் விஜயத்தினை நேற்று(06.11.2020) மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், சமுர்த்தி உத்தியோகஸ்தர்களின் வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எனும் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை திட்டம், சமுர்த்தி பயனாளிகளை வலுவூட்டுவதற்கான ஆய்வு போன்றவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரிவாகக் கேட்டறிந்தார்.

அத்துடன், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் எதிர்கொள்ளும் ஆளணி பிரச்சினை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததுடன் தற்போதைய சூழலில் மக்களுக்கான சேலைகள் தடையின்றிக் கிடைபபதற்கு சமுர்;த்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் அதிகாரிகளின் செயற்பாடு தொடர்ச்சியானதாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் சமுர்த்தி நியமனங்கள் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: