மக்களின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு கட்சியூடான எமது செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, January 14th, 2018

சட்டவிதிமுறைகளை மீறாமல் நாம் எமது உள்ளூராட்சி மன்ற பிரசாரங்களை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியது அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சுண்டுக்குழி சோமசுந்தரம் அவனியூவில் கட்சியின் வேட்பாளர் அலுவலகத்தை திறந்தவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வேட்பாளர் அலுவலகம் திறந்துவைப்பது என்பது ஒரு சட்டபூர்வமான ஏற்பாடுதான். இதனூடாக மக்களின் தேவைகளை மட்டுமன்றி அவர்களது பிரச்சினைகளையும் இலகுவில் அறிந்துகொள்ளமுடியும்.அதன்பிரகாரம் நாம் தேர்தல் சட்ட விதிமுறைகளை மதித்து அந்த விதிமுறைகளுக்கு அமைய எமது பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும்.

அதுமட்டுமன்றி நல்ல சிந்தனையுடன் கூடியதான எமது மக்களின் அவிலாஷைகளை மதிக்கவும் அதனை வென்றெடுக்கும் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு எமது பிரசாரங்களை மட்டுமன்றி கட்சியூடான எமது செயற்றிட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும்.

அந்தவகையில் நல்லதொரு ஆரம்பம் அரைவாசி வேலையை பூர்த்திசெய்யும் என்பதற்கு அமைவாக வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் இதுபோன்று தத்தமது பகுதிகளில் அலுவலகங்களை அமைத்து பிரசார வேலைகளை மேற்டிகோள்ளவேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts:

யதார்த்தவாதிகளையே மக்கள் வெற்றியடையச் செய்யவேண்டும் - ஊடக சந்திப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்...
கொக்குவில் கிழக்கு மகமாஜி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்துள்ள கோரிக்கை!
மக்கள் தமது நலன்களுக்காகவே என்னை தொடர்ச்சியாக நாடாளுமன்றம் அனுப்பி வருகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் சுட...

அரசியலுரிமை பிரச்னைக்கான தீர்வு காலம் கடத்தி செல்வதை அனுமதிக்க முடியாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
யாழ் கிளிநொச்சி மாவட்ட வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்!
அக்கராயனில் கரும்புச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்த...