ஏழு கடல் மைல் சட்டம் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, March 14th, 2020

சுருக்கு வலையைப் பயன்படுத்தி கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுகின்றமை தொடர்பாக திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் மத்தியில் நிலவி வந்த முரண்பாடுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் தீர்வு காணப்பட்டுள்ளது.

அந்தவகையில், சுருக்கு வலைப் பயன்பாடு தொடர்பாக அமைச்சரவையில் தீர்க்கமான முடிவினைக் எட்டும் வரை கடந்த காலங்களில் சுருக்கு வலை பயன்பாட்டிற்கான அனுமதியைப் பெற்றுள்ளவர்கள் 1.5 இஞ்சி வலைகளைப் பயன்படுத்தி 7 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடியில் ஈடுபட முடியும் எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் எந்தவிதமான பாகுபாடுமின்றி சட்ட ரீதியான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சுருக்கு வலையைப் பயன்படுத்துவோரின் சார்பான சங்கப் பிரதிநிதிகள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தும் சிறுதொழிலாளர் சங்கப் பிரதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் இன்று(14.03.2020) கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது
சுருக்கு வலை பயன்பாட்டை முற்றாக தடைசெய்யுமாறு வலியுறுத்தி இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கிய உறுதி மொழிக்கமைய இன்றைய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த திருகோணமலை மாவட்ட சிறுகடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள், சுருக்கு வலை அனுமதியைப் பெற்றுள்ளவர்களினால் சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்களும், மீன்பிடி முறைகளும் பயன்படுத்தப்படுத்துகின்றனர்.

அதேவேளை, நிபந்தனைகளை மீறும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட கடல் எல்லையை தாண்டி அனுமதிக்கப்படாத வலைகளைப் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளினால் பாரம்பரிய முறையைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.


இந்நிலையில், கடந்ந பல ஆண்டுகளாக முறையான அனுமதி பெற்று சட்ட ரீதியான மீன்பிடியில் தாங்கள் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இவ்வருடம் இதுவரை அனுமதிகள் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய சுருக்கு வலை பயன்டுபடுத்தும் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், குறித்த அனுமதியை தமக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இவைதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள், சட்ட ரீதியான மீன்பிடி முறைகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பயன்படுத்;துவதால் கடல் வளம் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகின்ற நிலையில் நாடளாவிய ரீதியில் அவை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலான நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், சுருக்கு வலைப் பயன்பாடு தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றமையினால் இவ்விடயம் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்க்கமான முடிவினை அமுல்ப்படுத்துவதற்கு தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்த அமைசசர் அவர்கள், அதுவரையான காலப் பகுதியில் சுருக்கு வலைப் பயன்பாடு தொடர்பான சட்டத்தில் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு குறித்த தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு தெரிவித்ததுடன் நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வழித்தட அனுமதிக்கான அறவீட்டை மேலும் இரண்டு மாதங்களுக்கு சலுகையாக பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் த...
கரைவலை மீன்பிடித் தொழிலில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமை...
நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம்!

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து வர்த்தக நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்க வேண்டும் – டக்ளஸ் ...
மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான நிதியை விடுவிப்பதற்கு ஏ...
சகல மக்களின் உரிமைகள் வெல்லவும் சமகால இடர்கள் நீங்கவும் உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம் - மே தின ...