நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் சட்டங்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை – பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 9th, 2023

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து எவரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தை திறந்துவைத்த பின்னர் உரையாற்றியபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களை முடக்குவதற்கு அன்று கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை விட இச்சட்டம் குறித்து கவலையடையத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு சட்டங்கள் அவசியமாகும் என்றும் இதனை அமெரிக்கா உட்பட பல நாடுகள் கைகொண்டுள்ளன என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

ஆகவே நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் இவ்வாறான சட்டங்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மீள் குடியேற்றம் தொடர்பிலான நிபந்தனைகள் எமது மக்களின் மீள் குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே இருத்தல் வ...
கஞ்சாக்காரர்களை காப்பாற்றியவர்கள் தமிழர்களது ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
கடற்படையுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...