வருட இறுதிக்குள் 4,200 ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு நவீன VMS கருவி பொருத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, March 10th, 2023

நாட்டில் பயன்பாட்டிலுள்ள அனைத்து பலநாள் மீன்பிடி படகுகளுக்கும் வி. எம். எஸ் செய்மதி தொழில்நுட்பகருவிகளை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் 4,200 படகுகளுக்கு வி. எம். எஸ் கருவி பொருத்தும் பணிகள் நிறைவு செய்யப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், எதிர்க்கட்சி எம்பி திருமதி கோகிலா குணவர்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது பயன்பாட்டிலுள்ள பல நாள் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும் அவற்றில் செய்மதி தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ள படகுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும் குறிப்பிடுமாறு,கோகிலா குணவர்த்தன எம்.பி,கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

நாட்டில் தற்போது 5,000 பல நாள் மீன்பிடிப் படகுகள் பாவனையில் உள்ளன. அவற்றில் 3,700 படகுகளுக்கு தொழில்நுட்ப வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கருத்திட்டத்தின் மூலம் 4,200 படகுகளுக்கு வி. எம். எஸ் கருவிகள் பொருத்தப்படவுள்ளன.

அதில் 3,075 படகுகளுக்கு வி.எம்,எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் படகுகளைக் கண்காணிப்பதற்கான கண்காணிப்பு மையம் ஒன்றை அமைப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: