ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து எல்லோரும் வாக்களியுங்கள்  – டக்ளஸ் எம்.பி. வேண்டுகோள்!

Friday, February 9th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் உங்கள் ஒவ்வொருவரது பிரதேசங்களின் அபிவிருத்திக்கானதும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கானதுமான தேர்தலாக அமையவுள்ளதால், நீங்கள் ஒவ்வொருவரும் தவறாது வாக்குகளை அளித்து உங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுங்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளப் பெருமக்களுக்கு விடுத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தேர்தல் முறைமூலம் தாம் விரும்பிய பிரதிநிதிகளை தெரிவுசெய்வது மக்களது ஜனநாயக உரிமையாகும். இதன் அடிப்படையில் நாளையதினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தாம் வாழும் பகுதியில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு மக்கள் தாம் விரும்புகின்ற கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

அந்தவகையில் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளித்தும் வாக்குச்சாவடிகளில் அறிவுறுத்தப்பட்டுள்ள அறிவித்தல்களுக்கும் அமைவாக வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தமது வாக்குகளை அந்தந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு நேரகாலத்திற்கு சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே இந்த நாடு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி கண்டிருந்தது – நாட...
யாழ் மாவட்டத்திற்குள் நிர்க்கதியாக இருப்பவர்கள் தத்தமது சொந்த இடங்களுக்கு மீளவும் செல்ல முடியும் - அ...
மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உடன்படிக...