யாழ் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, நாமல் ராஜபக்ச நேரில் சென்று கண்காணிப்பு!

Sunday, May 30th, 2021

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதியினால் முதற் கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் யாழ். மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

குறித்த தடுப்பூசிகள் பாதிப்பு அதிகமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் வேலைத்திட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.  

இந்நிலையில், அரியாலை பிறப்பன் குளம் மகா மாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கு சென்ற அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, நாமல் ராபக்ஷ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் உட்பட்ட குழுவினர் தடுப்பூசி ஏற்றப்படும் செயற்பாடுகளை நேரடியாக அவதானித்ததுடன், பொது மக்களுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

முன்பதாக யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்லஸ் மற்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக  கையளிக்கும் வேலைத்திட்டம் இன்று காலை இடம்பெற்றது.

நாடு பூராகவும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரது பணிப்பில் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்கு  முதற்கட்டமாக 50 ஆயிரம்  தடுப்பூசிகள் வழங்கப்பட்டுடிருந்தன.

இந்நிலையில் இன்றுகாலை 8 மணி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவிலும் பொதுமக்களுக்கு கொரோனா  தடுப்பூசி வழங்கும் செயற்பாடு  முன்னெடுக்கப்படுகிறது

இதனிடையே

இன்றுமுதல் யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு வருகைதந்திருந்தார்.

சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தலா 50 ஆயிரம் தடுப்பூசிகள் வீதம் சினோபாம் தடுப்பூசிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில், கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம சேவையாளர் பிரிவுகளில் இந்த தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை மேதற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, தெரிவு செய்யப்பட்ட இடங்களில், இன்று காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முதலாம் மாத்திரை தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவருக்கு, இரண்டாம் மாத்திரை தடுப்பூசி வழங்கப்படும் நேரம் மற்றும் இடம் என்பனவற்றை குறுந்தகவல் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதேநேரம், கைப்பேசிகள் இல்லாதவர்களுக்கு மாற்று வழியில் இதுகுறித்து அறிவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இடர்பட்ட எமது மக்களின் வாழ்வை புதிய பாதையில் முன்னெடுத்துச் செல்வதே எமது நோக்கமாகும்  - முல்லைத்தீவி...
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமை...
குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாத...