தமிழ் வரலாற்றுப் பாடநூல்களின் குறைகளையகற்ற ஆலோசனைக் குழு!

Wednesday, April 19th, 2017

பாடசாலை மாணவர்களுக்கான தமிழ் வரலாற்றுப் பாடநூல்களில் தமிழர்களினதும், தமிழ் மன்னர்களினதும் உண்மையான வரலாறுகளை உள்ளடக்குவதற்கும், தமிழ் மொழியிலேயே பாடங்கள் எழுதப்படுவதற்கும் ஏதுவாக பாடத் தயாரிப்பிற்கென துறைசார் தகைமை கொண்டவர்களை உள்ளடக்கிய குழுவொன்றை அமைப்பதற்கும், அக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கென துறைசார் நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவொன்றை அமைப்பதற்கும் இன்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்கனவே இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியமைக்கு அமைவாக ஏற்கனவே இரண்டு கலந்துரையாடல்கள் நடைபெற்ற நிலையில் நேற்றைய தினம் (18) மாலை கல்வி அமைச்சில் மேலுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றபோதே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மேற்படிக் குழுக்களை அமைப்பதற்கு முன்பதாக, ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்து மேற்படிக் குழுக்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பில் வரைபு ஒன்றைத் தயாரிப்பதெனவும், பின்னர் அந்த வரைபினை முன்வைத்து பாடத்திட்டங்கள் மற்றும் பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதென்றும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கலந்துரையாடலில் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் பேராசிரியர்  சி. பத்மநாதன், பேராசிரியை கிருஸ்ணவேணி, ஆய்வாளர்களான நந்தினி,  இந்திரகுமார் ஆகியோரும், கௌரவ இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் அவர்களது தலைமையில் கல்வி அமைச்சு அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

unnamed (3)

Related posts:

தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்...
சுண்டிக் குளத்தில் சட்டவிரோத இறால் கூடுகளை அகற்ற அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - வாழ்வாதார உதவிகளும் வழங...
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னேற்றுதல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம் – துறைசார் அதிகாரிக...