சுண்டிக் குளத்தில் சட்டவிரோத இறால் கூடுகளை அகற்ற அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைப்பு!

Thursday, December 30th, 2021

சுண்டிக்குளம், ‘கலப்புக் கடல்’ என்று அழைக்கப்படும் ஆனையிறவுக் கடல் நீரேரிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இறால் கூடுகளை இன்று(30.12.2021) நேரில் சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குறித்த இறால் கூடுகளினால் பருவமடையாத இறால்கள் பிடிக்கப்படுவதுடன், மீன் குஞ்சுகளும் அழிவடைகின்றன.

இதனால், கடல் வளங்கள் பாதிக்கப்படுவதுடன்,   பொருளாதார இழப்பும் ஏற்படுகின்ற நிலையில், வளங்களை முகாமைப்படுத்தி மக்களுக்கு உச்ச பலனை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சரினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, வாழ்வாதாரத்திற்காகவே குறித்த இறால் கூடுகளை அமைப்பதற்கு தாம் நிர்ப்பந்திக்கப்பட்டருப்பதாக, சட்டவிரோத கூடுகளை அமைத்துள்ள கடற்றொழிலாளர்கள் அமைச்சரிடம் தமது நிலையை எடுத்துரைத்தனர்.

அதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், அனைவருக்கும் பயன் கிடைக்கும் வகையிலேயே பருவமடையாத இறால்களைப் பிடிப்பதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெளிவுபடுத்தியதுடன்,  மேலும் 10 மில்லியன் இறால் குஞ்சுகளை விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இடைப்பட்ட காலத்திற்கான வாழ்வாதாரத்திற்காக கொடுவா மீன் வளர்ப்பிற்கான கடன் திட்டங்களை இரண்டு வாரங்களில் பெற்றுத் தருவதாகவும், அதற்கான பட்டியலை அதிகாரிகளிடம் வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கண்ணகி நகர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தல் மற்றும் எதிர்கொள்ளும் அசௌகரியங்களுக்கு தீர்வு காணுதல் தொடர்பாக ஆராயும் வகையில் இன்று  கண்ணகி அம்மன் அலய மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,

“உங்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு தயாராக உங்களிடம் வந்திருக்கின்றேன்.

என்னை நம்பி என்னோடு கைகோர்த்து வருவீர்களாயின் வளமான எதிர்காலத்தினை உருவாக்கித் தருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வாழ்வாதார உதவிகள் தொடர்பான கோரிக்கைகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்த கண்ணகி நகர் கடற்றொழிலாளர் சமாசத்தினை சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினருக்கு சமுர்த்தி கடன் உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கைவேலி ஸ்ரீமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல்லை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ...
யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கும்  புனர்வாழ்வு பெற்றவர்களுக்கும் விசேட நிதித்திட்டம் வேண்டும் - ...
தேச விடியல் நேசர் அமரர் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரிய...

கஞ்சாக்காரர்களை காப்பாற்றியவர்கள் தமிழர்களது ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
வெளிவாரி பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்பி வலியுறுத்து!
எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம்: பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் அமைச்சர்...