கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Friday, April 23rd, 2021

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் கிராமிய கடற்றொழிலாளர் சமேளனத்தின் நிர்வாகிகள், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் உதவிப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கிடையிலான குறித்த கலந்துரையாடலில், இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் மற்றும் தடைசெய்யப்பட்ட உள்நாட்டு தொழில் முறைகளை தடுத்தல் போன்றவை தொடர்பாக ஆராயப்பட்டது.

மேலும், மீனவர்களுக்கு அறிவிக்கப்படும் கடன் வசதிகளை பயனாளர்களுக்கு வழங்குவதை இலகுபடுத்துவதற்கான வழிவகைகள் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

Related posts:

தேசிய கொள்கை அமைப்பதனூடாகவே விவசாயிகள் நன்மை பெறமுடியும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்...
பதற்றம் தேவையில்லை : ஆனாலும் விழிப்புடன் இருங்கள் – கொரோனா தடுப்பு விசேட ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு - மிருசுவில் புனித நிக்கொலார் ஆலய விச...

மக்களுக்காக தம்மை அர்ப்பணிப்பவர்களே மாற்றுத்தலைமைக்குத் தகுதியானவர்கள் - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்ப...
கௌதாரிமுனை இலங்கை - சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்திற்கு...
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் ஜனாதிபதி - மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அவசியம் என அமைச...