அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – புதுமுறிப்பில் 40 குடும்பத்தினருக்கு நிரந்தர வாழ்வாதாரம்!

Monday, June 19th, 2023

புதுமுறிப்பு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டார்.

முன்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால், சுமார் 20 மில்லியன் ரூபாய் அரச நிதியில், கைவிடப்பட்டிருந்த நன்னீர் மீன் உற்பத்தி தொட்டிகளில் முதற்கட்டமாக 5 தொட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீன் குஞ்சு உற்பத்திகளை மேற்கொள்ளக் கூடிய மேலும் 5 தொட்டிகள் தெரிவு செய்யப்பட்டு 10 தொட்டிகளில் உடனடியாக உற்பத்தி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏனைய தொட்டிகளையும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நியைில் இந்த உற்பத்தி நடவடிக்கைகள் மூலம் புதுமுறிப்பு நன்னீர் மீனவர் சங்கத்தினை சேர்ந்த சுமார் 40 குடும்பத்தினருக்கு நிரந்தர வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

கிராஞ்சி மற்றும் வலைப்பாடு ஆகிய கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைய கடலட்டை பண்ணைகள் உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், இரண்டு கிராமங்களுக்கும் இடையிலான கடல் எல்லை தொடர்பாக உருவான முரண்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்நிலையில், பூநகரி பிரதேச செயலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலில் குறித்த விடயம் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் சம்மந்தப்பட்ட கிராமங்களை சார்ந்த கடற்றொழில் சங்கப் பிரதிநிதிகள், துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்

000

Related posts:

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ள...
அவசியம் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் – திருமலையில்...
பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை - யாழ் ஒருங்கி...

கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இறங்கு துறையை புனரமைத்து தருமாறு மயிலிட்டி பிரதேச கடற்றொழிலாளர்கள் அமை...
யாழ் மாவட்ட கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அமைச்சர்களான சுசில் மற்றும் டக்ள...
பின்னடைவை கண்டிருந்த அலங்கார மீன் ஏற்றுமதித் தொழிற்றுறை மீண்டும் வளர்ச்சியடைந்துள்ளது - அமைச்சர் டக்...