அவசியம் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, March 2nd, 2024

நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாவிட்டாலும் அவசியம் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்திலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை பலப்படுத்துவீர்களாக இருந்தால் இங்கு எமது மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு எம்மால் தீர்வைக்காண முடியும் என்று தெரிவித்துள்ளார்.

திருகோணமலைக்கான இரு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தின் பல்வேறு தரப்பினரது பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் திருகோணமலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் நெயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனும் கலந்துரையாடியிருந்த அமைச்சர் மேலும் கூறுகையில் –

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவானால் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று நம்புகிறேன்.  

தன்னை நம்பியவர்களை தான் என்றும் கைவிட்டதில்லை என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  திருமலை மாவட்டத்தில் காணப்படும் கடற்றொழிலாளர் சார் தேவைப்பாடுகள் மற்றும் மக்கள்சார் தேவைப்பாடுகள் போன்றவற்றை நேரடியாக அறிந்து கொள்வதுடன்,= கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்துவதற்காகவே குறித்த இருநாள் திருகோணமலைக்கான விஜயத்தின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகள் பரந்துபட்டளவில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் தற்போது நடைமுறைசாத்தியமான வழிமுறையை பின்பற்றுகின்ற எமது கட்சியின் அரசியல் இலக்குகளை அடைவதற்கு சாத்தியமான சூழல் ஏற்பட்டுள்ளமையினால், நம்பிக்கையுடன் உழைத்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் சாதகமான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

000

Related posts:

எம் வசம் கிடைக்கும் உள்ளூராட்சி சபைகள் ஊர் பிரமுகர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையின் ஆலோசனைகள் பெற்றே நிர...
தமிழர்களை அரசியல் தோல்விக்குள் தள்ளிவிடவே கூட்டமைப்பு முயற்சிக்கின்றது - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்று அகவை அறுபத்து மூன்று - தமிழ் மக்கள் தொடர்ச்சியான வாழ்த்த...