ஆட்சி தற்போது யார் கையில் இருக்கிறது? – டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, June 28th, 2019

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் நாட்டு மக்களிடையே இன்னுமொரு பாரிய சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நாட்டை ஆட்சி செய்பவர்கள் யார்? என்ற சந்தேகமே அது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த சந்தேகம் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்பிருந்தே எமது மக்களுக்கு இருந்து வருகின்றது. அப்படி ஒன்று இல்லாத காரணத்தினால்தான் அத்தகையதொரு தாக்குதல் மிக இலகுவாகவே மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்படும் நிலையில் இந்த எமது மக்களின் சந்தேகம் அந்தத் தாக்குதலுக்குப் பின்னர் மேலும் வலுத்துவிட்டுள்ளது என்றே தெரிய வருகின்றது.

ஒரு அடிப்படைவாதம் தாக்குதல் நடத்திவிட்டுப் போக ஏனைய அனைத்து அடிப்படைவாதங்களும் தலை நிமிர்ந்து விட்டுள்ள ஒரு நிலைமையைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இத்தகைய அடிப்படைவாதிகள் ஆட்சியை தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு பொது மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய உறுதி மொழிகளை இவர்கள் வழங்கி வருகின்ற நிலைமையும் காணப்படுகின்ற நிலையில் இவற்றை பார்வையாளர்கள் வரிசையில் நின்று ஆட்சியாளர்கள் பார்த்துக் கொண்டிருக்ககின்ற நிலைமையானது நாட்டின் பரிதாப நிலைமையினையே எடுத்துக் காட்டுகின்றது.

இத்தகைய செயற்பாடுகள் முற்றிலும் சுயலாப அரசியலை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாதிகளின் ஏனைய மதங்களுக்கிடையேயும் இனங்களுக்கிடையேயும் விரிசல்களை வளர்ப்பதற்கான செயற்பாடுகளாகவே செயற்படுத்தப்பட்டு வருவதையும் காணக் கூடியதாகவே இருக்கின்றது.

இத்தகைய செயற்பாடுகள் இந்த நாட்டின் அமைதிக்கு எந்தளவில் பாதிப்புகளை ஏற்படுத்தப் போகின்றன? என்பது பற்றி சிந்தித்து செயற்பட வேண்டிய நீங்கள் வாக்குகளுக்காக வளைந்து, நெளிந்து கொண்டிரக்கின்றீர்கள் என்றால் இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு அமைதி என்பiவை எல்லாம் எதற்காக? என்றே மக்கள் கேட்கிறார்கள்.

இன்று இந்த நாட்டிலே எமது மக்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இதில் ஏற்கனவே இருந்த பிரச்சினைகள் வேறு பூதாகரமாகி விட்டுள்ளன.

Related posts:

முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதிலுள்ள தடைகள் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்...
எனது முயற்சியால் கிடைக்கப்பெற்ற இந்தியன் வீட்டுத் திட்டத்தை உரிமை கோர எவருக்கும் அருகதை கிடையாது - ட...
கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை - விவேகம் அற்ற வீரம் ஏற்படுத்...

ஐந்து கட்சிகளின் கூட்டு: மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்பி த...
இளம் சமூகத்தினரை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்க உறுதியோடு உழைத்தவர் அமரர் சபாரட்ண ஜயர் ஈஸ்வரசர்மா - அ...
சிவஸ்ரீ பாலசுப்பிரமணிய குருக்கள் பத்மநாதக் குருக்களின் இழப்புச் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – அன...