யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, January 9th, 2021

தமிழ் மக்களின் பெயரால் நடைபெற்ற ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நேற்று இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்

இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,  உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளுகின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவமும்  வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுவான தூபி அமைக்கப்பட வேண்டும்   என்று தனிநபர் பிரேரணை கொண்டு வந்ததை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் பிரதிநிதிகளின்  போதிய ஒத்துளைப்பு இன்மையினால் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியவில்லை என்று தெரிவித்ததுடன், எதிர்வரும் அமைச்சரவையில் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts:


வடக்கு - கிழக்கில் "கள்" இறக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - டக்ளஸ...
வடக்கில் துயரங்கள் தொடர்வதற்கு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களே காரணம் - நாடாளுமன்றில் செயலாளர் ந...
வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்...