நற்பண்புகள் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டப்படவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, September 25th, 2017

சமூகத்தை நல்வழிப்படுத்டுதுவதில் விளையாட்டின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. அதனை உணர்ந்துகொண்டு இளைய சமூகத்தினர் எதிர்காலங்களில் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் வி. சிவகுருநாதன் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் மின்னொளியில் நடத்தப்பட்ட இறுதியாட்டத்திலும் பரிசளிப்பு நிகழ்விலும் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு சமூகம் வளர்ச்சியும் உயர்ச்சியும் காணவேண்டுமாயின் கல்வித்துறைக்கூடாக மட்டும் சாதித்துவிட முடியாது. இதற்கு விளையாட்டுத்துறையும் பக்கபலமாக இருக்கும் நிலையில் அதனை உணர்ந்துகொண்டு இளைய சமூகத்தினர் மட்டுமல்லாது பெரியவர்களும் ஒருங்கே இணைந்து செயற்படவேண்டும்.

வெற்றி தோல்வியை சமமாக மதிக்கும் மாண்பை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சகவீரர்களையும் எதிரணி வீரர்களையும் மதிக்கும் நற்பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நற்பண்புகள் என்பது சொல்லில் மட்டுமல்ல செயலிலும் செயல்வடிவத்திலும் காட்டப்படும்போதுதான் சமூகத்தில் பல முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பல்வேறு சமூகப்பணிகள் குறித்து நான் கேள்வியுற்றிருக்கின்றேன். அந்தவகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்த செயலாளர் நாயகம் சமூகப்பணி என்பது வயது, பால் வேறுபாடின்றி சமூக முன்னேற்றத்திற்காகவும் உயர்ச்சிக்காகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதன். அடிப்படையிலேயே கல்வித்துறை மட்டுமல்லாது விளையாட்டுத் துறையையும் ஒருங்கே இணைத்ததாக பாடாசாலைகளில் மட்டுமன்றி சமூகங்களில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் விழாக்களிலும் விளையாட்டுத்துறையின் முக்கியத்துவத்தையும் தேவைகளையும் உணர்ந்துகொண்டு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செய்ற்பட வேண்டும். இவ்வாறான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் நிச்சயம் சமூகத்தில்  நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் என்றும் டக்ளஸ் தேவானந்தா இங்கு சுட்டிக்காட்டினார்.

வருத்தப்படாத வாலிபர் சங்க செயலாளர் ஆ.பிரணவன்  தலைமையில் நடைபெற்ற குறித்த கரப்பந்தாட்டப்பேட்டியின் இறுதி போட்டியில் மோதிய ஆவரங்கால் இந்து இளைஞர் கழகம் தன்னை எதிர்த்து மோதிய ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழகத்தை 25:13,25:23,20:25,15:25,15:13 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றியீட்டி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டதுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடமிருந்து வெற்றிக்கிண்ணத்தையும் பணப்பரிசையும் பெறுக்கொண்டது.

22050545_1539172516121830_428996621_o

Related posts:

நாட்டின் நலன்களுக்காக ஊடகங்கள் செய்யும் பங்களிப்பு வரவேற்கத்தக்கது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!
தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் ட...
கல்முனை உப பிரதேச செயலக கணக்காளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்? - நாடாளும்றில் டக்ளஸ் எம்.ப...

அரசின் திட்டங்கள் தமிழ்பேசும் மக்களுக்கு புரியும்படியாக அமையவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...
வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்...
கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு அமைச்சர் டக்ளஸின் தொடர்ச்சியான முயற்சியே...