போக்கற்றவர்களே கடலட்டைப் பண்ணைகளை விமர்சிக்கின்றனர் – பல்தேசியக் கம்பனிகள் சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும் அமைச்சர் டக்ளஸ் சவால்!

Wednesday, March 13th, 2024

போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை பற்றி தவறாக பேசுவதாக சாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக் கம்பனிகளோ சீனப் பிரஜைகளோ சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும் சவால் விடுத்துள்ளார்.

கடலட்டை பண்ணைகள் தொடர்பாக சமூக ஆர்வலர்களாக தம்மை அடையாளப்படுத்துவோர் சிலர் அவ்வப்போது வெளியிடும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், எமது மாவட்டங்களில் காணப்படும் வளங்களை பயன்படுத்தி அந்தந்த பிரதேச மக்களின் வாழ்வியலை கட்டியெழுப்பும் நோக்ககோடு, விஞ்ஞான ஆய்வுகள் மூலம் சூழலியல் பாதுகாப்பை உறுதி செய்து மேற்கொள்ளப்படும் கடலட்டை பண்ணைகளை எழுந்தமானமாக விமர்சிப்பதன் மூலம் எமது மக்களுக்கு துரோகம்  இழைக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

000

Related posts:

புகையிலைச் செய்கைக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் மாற்றீடு அவசியம் - டக்ளஸ் தேவானந்தா!
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் - எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் ஈ.பி...
உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எனது தீர்மானங்கள் அமையும் – போராட்டத்தை முன்னெடுத்திருந்த கடற்றொழிலாளர்கள...