வயோதிபப் பிராயத்தையுடையவர்களது நலன்களில் விஷே அக்கறை செலத்தப்பட வேண்டும்!
Monday, December 4th, 2017
தற்போது எமது நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களின் தொகையானது நூற்றுக்கு 12 வீதமாக இருப்பதாகவும் இது 2020ஆம் ஆண்டளவில் 20 வீதமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இந்த வயோதிபப் பிராயத்தையுடையவர்கள் பல்வேறு வகையிலான நோய்களுக்கு ஆட்படக்கூடும் என்பதால் அதற்குப் பாரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படுவதுடன் அதற்கென விN~ட கவனம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது.
எனவே தற்போது சிறுவர்களுக்கென தனியான பிரிவுகள் மருத்துவ மனைகளில் ஏற்படுத்தப்படுவதுபோல் வயோதிபருக்;கெனவும் தனியான பிரிவுகளை ஏற்படுத்துவதற்கும் நாட்டில் வயோதிபர்களுக்கென தனியானதொரு மருத்துவ மனையை அமைப்பதற்கும் 75 வயதுக்கு மேற்பட்டோர்கள் தொடர்பில் விN~ட கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளமையை மீண்டும் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


