தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Saturday, March 16th, 2019

தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு என்பது எமது மக்களை கடந்த யுத்த காலத்தைவிட அதிகளவில் உணர்வு ரீதியாகப் பாதித்து வருகின்ற ஒரு செயற்பாடாகவே அமைந்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட விவாதத்தின், புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு – வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்பன தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்த காலத்தில் பல்வேறு பாதிப்புகள் இருந்த போதிலும் எமது மக்கள் தங்களது மத வழிபாடுகளை மேற்கொண்டாவது சற்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இன்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் எமது மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், தாங்கள் காலங்காலமாக வழிபாடுகளை மேற்கொண்டிருந்த மத ஆலயங்களைக்கூட பறிகொடுத்துவரும் நிலையிலேயே பரிதவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கமய், பன்சலய், வெவய், தாகெபய் – புயஅயல – Pயளெயடயல – றுநறுயல – னூயபநடியல – அதாவது ஊரும் பன்சலையும், குளமும் தாதுக் கோபுரமும் என்று சிங்கள பௌத்த மக்கள் வாழ்வியலில் இருந்து வருகின்ற கட்டமைப்பிற்கு ஏற்ப ஏனைய இன மத மக்களும் ஊரும் மத வழிபாட்டுத் தலங்களும், குளங்களும் கோபுரங்களும் என்ற கட்டமைப்பின் கீழ் வாழ்ந்து பழகியவர்கள்.

அந்தவகையில் எமது மக்களது வாழ்விடங்கள், வாழ்வாதார இடங்கள் மற்றும் வழிபாட்டு இடங்கள் என்பன தொல்பொருள் திணைக்களத்தினால் அபகிரிக்கப்பட்டு வருகின்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையானது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே தொடர்கின்றது.

பல நுறற்றாண்டு காலமாக எமது மக்களால் வழிப்பட்டு வந்த முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம், புல்மோட்டை அரிசி ஆலை மலைப்பகுதி விகாரை அமைத்தல் விவகாரம், குமுழமுனை, குருந்தூர் மலையில் விகாரை அமைத்தல் விவகாரம்,   வவுனியா நெடுங்கேணி, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரம், ஐயனார் ஆலய விவகாரம், தென்னமரவடி கந்தசாமி மலை விகாரை அமைப்பு விவகாரம், மூதூர், சூடைக்குடா மத்தள மலைப்பகுதி முருகன் ஆலய விவகாரம், கோணேஸ்வரர் ஆலய விவகாரம், முல்லைத்தீவு மூன்றுமுறிப்பு கண்ணகி அம்மன், வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயம், சிவபுரம் சிவாலயம், ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயம், மாந்தை கிழக்கு ஆதிசிவன் கோயில் போன்ற ஆலயங்களுக்கு அருகிலுள்ள இடங்கள் போன்றவற்றில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகளால் இன முரண்பாட்டு நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பாரிய பிரச்சினைகள் இந்த தொல்பொருள் திணைக்களத்தினால் எமது மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மாவட்டம் என்ற ரீதியில் எடுத்துக் கொண்டால் முல்லைத்தீவு மாவட்டத்திலே அதிகளவிலான இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் ஆலங்குளம் புராதன தூபி, கட்டடச் சிதைவுகள், ஒட்டுசுட்டான் அம்பகாமம் – இரணைமடு வட்டக்காலிக் குளத்தின் கிழக்காகவுள்ள சிதைவுகள், மண்மேடுகள், முத்துஐயன்கட்டு குளத்தை அண்மித்த பகுதியில் சிதைவடைந்த கட்டடங்கள், மதில்கள், கற்சிதைமடுக் கிராமத்தின் பேராறு கட்டட சிதைவுகளும், கற்தூண்களும், கொட்டியமலைக் கிராமத்திலுள்ள கொடிக்கற்சி கொட்டிமலை பகுதியில் நீர் வடி வெட்டப்பட்ட கோபுர மேடும் கட்டட சிதைவுகளும், பண்டாரவண்ணியன் கிராமத்தில் அமைந்துள்ள புதையல்பிட்டி, கனகரத்தினம் கிராமத்தில் அமைந்துள்ள தொல்லியல் சிதைவு, பேராறு பழைமைவாய்ந்த அணைக்கட்டு, மன்னாகண்டால் புராதன கட்டச் சிதைவு, ஓதியமலை குகைத் தொகுதி, ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயப் பகுதியில் உள்ள தொல்லியல் சிதைவுகள்,

கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செம்மலைக் கிழக்கு தாதுகோபுர மேடுகள் மற்றும் தொல்லியல் சிதைவுகள், குமுழமுனை தண்ணிமுறிப்புக்குள கோபுர மேடுகளும், சிதைவுகளும், குமாரபுரத்திலுள்ள சிறிசித்திர வேலாயுத முருகன் ஆலயத்தின் தொல்லியல் சிதைவுகள், குமுழமுனை பிள்ளையார் கோவிலை அண்மித்த சிதைவுகள், ஆண்டாங்குளத்தில் கோபுர மேடுகள், கட்டடச் சிதைவுகள்,

கொக்கிளாய் வண்ணாத்திக்குள தொல்லியல் சிதைவுகள், முல்லைத்தீவு பொதுச் சந்தை வளாகம், மாந்தை கிழக்கு வவுனிக்குளம் சிறிமலை கோவிலும், சிதைவுகளும், கீரிசுட்டான் பறங்கியாற்று கோபுரங்களும், சிதைவுகளும், சிறாட்டிக்குளம் வெட்டுநீராவி தாதுகோபுர மேடுகள், மூன்றுமுறிப்பு கொம்பு அச்சுக் குளம், கிராம கட்டட சிதைவுகள், வன்னி விளாங்குளம் பெரியகுளம் கட்டடச் சிதைவுகள், செங்கல் மதில் சிதைவுகள், பூவரசன்குளம் பத்திரகாளி அம்மன் கோவில் கல்வெட்டும், சிதைவுகளும், பாண்டியன்குளம் சிவன்கோவில் கட்டடச் சிதைவுகள், விநாயகபுரம் கோபுர மேடு, நட்டாங்கண்டல் கட்டடச் சிதைவுகள், துணுக்காய் வன்னாரிக்குள கிராமத்திலுள்ள வெல்லியாவில்லு சிதைவுகள் போன்ற பல்வேறு இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பல இடங்கள் எமது மக்களால் பல நூற்றாண்டு காலமாக பூர்வீகமாக வழிபட்டு வந்த இடங்களாகக் காணப்படுகின்றன.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 இடங்கள் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட இடங்கள் எனக் கோரப்பட்டு அவற்றை உடனடியாக அளவீடு செய்து தருமாறு தொல்பொருள் திணைக்களம் நில அளவைத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாகத் தெரிய வருகின்றது. இந்த இடங்கள் எமது மக்களின் வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட இடங்கள் மட்டுமல்ல, வாழ்விடங்களாகவும், வாழ்வாதார இடங்களாகவும் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இத்தகைய எமது மக்களின் இடங்களை அபகரிப்பது தொடர்பில் தற்போது கலாசார அலுவல்கள் அமைச்சராக இருக்கின்ற கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்தி, எமது மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை தொடர்பில் ஏற்படுத்தப்படுகின்ற இடையூறுகளை நீக்குவதற்கு முன்வர வேண்டும்.

Related posts:

ஆட்சியில் பங்கெடுத்துள்ள கூட்டமைப்பு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றது - ஈ.பி.டி.பி தெரிவிப...
தென் இந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் தலைமையிலான குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!