தமிழர்களின் உரிமைகளுக்கும் உயர்ந்த வாழ்கை தரத்திற்கும ஒரே வழிமுறை ஈ.பி.டி.பி. யின் பொறிமுறைதான் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, June 22nd, 2020

தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேலதிக உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும் உயர்ந்த வாழ்கை தரத்தினை உறுதிப்படுத்துவதற்கும் பொருத்தமான ஒரே வழிமுறை ஈ.பி.டி.பி. கையில் வைத்திருக்கும்   பொறிமுறை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஈழ மக்கள ஜனநாயகக் கட்சியின் வட்டார செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கால போராளிகளினால் ஈ.பி.டி.பி. உருவாக்கப்பட்டபோது அதற்கு ஒரு தெளிவான இலக்கு இருந்தது.

அரசியல் தீர்வு, அபிவிருத்தி, அன்றாடப் பிச்சினைகள் ஆகியவற்றிற்கான தீர்வினைப் பெற்று மக்களுக்கு கௌரவமான வாழ்வை வென்றெடுப்பதே அந்த இலக்காகும்.

குறித்த இலக்கினை அடைவதற்கான தேசிய நல்லிணக்கம் என்கின்ற தெளிவான வழிமுறையை கட்டி வளர்த்திருக்கின்றோம்.

அந்த வழிமுறையினூடாகவே எமக்கு கிடைத்த அதிகாரங்களின் அடிப்படையில்  கடந்த காலங்களில் பல்வேறு விடயங்கள் சாத்தியமாக்கப்பட்டது.

ஆனால் எமது மக்களின் தேவைகளுடன் ஒப்பிடும்போது, நாம் சாதித்தவை போதுமானது அல்ல என்பதை ஏற்றுக் கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் எமக்கு போதிய அதிகாரத்தினை மக்கள் வழங்குவார்களாயின் பல்வேறு தியாகங்களினூடாக கட்டி வளர்க்கப்பட்டுள்ள  தேசிய நல்லிணக்கத்தினூடாக அனைத்து தமிழ் மக்களும் பலனடையும் வகையில் எமது இலக்கினை சென்றடைய முடியும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
வடக்கு கிழக்கில் உள்ள பொருளாதார நிலையில் வலுவிழந்த குடும்பங்களுக்கு நலன்புரி நிவாரணத் திட்டத்தில் மு...
பளை கரந்தாய் பகுதி LRC காணிகளில் வசிக்கும் மக்களின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை!