யாழ்ப்பாணத்திலும் கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் – புதன்கிழமைமுதல் நடைமுறைக்கு வருகின்றது !

Saturday, March 28th, 2020

கொரோனா தொற்று இலங்கையிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் முகமாக அரசு பல்வேறு முன்னாயத்த நடவடிக்கைகளையும் தற்பாதுகாப்பு விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் அந்த நோயின் தாக்கம் யாழ் மாவட்டத்திலும் உணரப்பட்டுள்ளமையால் அப்பரிசோதனையை துரிதகதியில் மேற்கொள்வதற்கு ஏதுவாக அதன் மருத்துவ பரிசோதனையை யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தமைக்கு அமைய அமைச்சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தின்போது கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இரண்டு யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிலையில், அவற்றை இயக்கும் ஆளணி மற்றும் தொடர்புடைய பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தார். இதற்கமைய அமைச்சரின் குறித்த கோரிக்கைக்கு  கடந்த அமைச்சரவை யில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கமைய யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் உள்ள பி.சி.ஆர் இயந்திரத்தை இயக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், வரும் புதன்கிழமையில் இருந்து யாழ்ப்பாணத்தில் குறித்த பரிசோதனையை ஆரம்பிக்க முடியும் என தான் நம்புவதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் புதன்கிழமைமுதல் யாழ்ப்பாத்தில் கொரொனா வைரசுக்கான மருத்துவப்  பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாடசாலை வரலாற்று பாட நூல்களில் தமிழ் மக்களது வரலாறுகளுக்கு பாரபட்சங்கள் நிகழாது - டக்ளஸ் தேவானந்தா அ...
விடுதலை பெறும் வரையில்  தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும்  - அமைச்சரிடம் டக்ளஸ் தேவான...
பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை சந்தித்த உழைப்பாளர் சங்கங்களின் பிரத...