வறுமையில் வீழ்ந்து கிடக்கும் உங்களது பிரதேசத்தை தூக்கி நிறுத்த அயராது பாடுபடுவேன் – முல்லை மக்களிடம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, October 24th, 2016

யுத்தத்தின் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னமாக காட்சியளித்த யாழ் குடாநாட்டின் அனைத்து பகுதிகளின் கட்டுமாணங்களையும் அங்கு வாழும் மக்களின் நம்பிக்கையான வாழ்வாதார அபிவிருத்திகளையும் எவ்வாறு தூரநோக்குள்ள யதார்த்த அரசியல் பாதையில் பயணித்து கட்டியெழுப்பியிருந்தேனோ அவ்வாறு பின்தங்கியிருக்கும் உங்களது பிரதேசத்தையும் நீங்கள் எதிர்பார்க்கும் அபிலாஷைகளுடன் கூடிய வாழ்வியலையும் உறுதிமிக்கதாய் கட்டியெழுப்பித்தர அயராது பாடுபடுவேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் அழைப்பின் பிரகாரம் இரண்டுநாள் விஜயம் ஒன்றை குறித்த மாவட்டத்திற்கு மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்துகொண்டார்.

9

குறித்த விஜயத்தின் ஒரு அங்கமாக கருநாட்டுக்கேணி பொது மண்டபத்தில் நடைபெற்ற மக்களது குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த முப்பது வருடங்களாக நாம் வலியுறுத்தி வந்த தீர்வு விடயத்தைத்தான் இன்று இதர தமிழ் அரசியல் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர். இந்த முடிவை அன்று ஆயுதம் தாங்கி போராடிய ஏனைய தரப்பினரும் எடுத்துக்கொண்டிருந்தால் நிச்சயமாக நாம் சிறந்ததொரு உரிமையுடன் கூடிய தீர்வை பெற்றுக்கொண்டிருந்திருக்க முடியும். ஆனால் தவறான தமிழ் அரசியல் வழிநடத்தல்களும் சுயநலம் கலந்த தமிழ் அரசியல் தலைமைகளது போக்கும் நாம் எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டை ஏற்க மறுத்துவந்தது மட்டுமல்லாது எம்மையும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து திட்டமிட்ட வகையில் ஓரங்கட்டவும் முயற்சி செய்தனர்.

7

முல்லை மக்கள் சரியான பாதை வழிநோக்கி திசைதிரும்பியிருப்பதானது இதுவரை காலமும் நீங்கள் பட்ட வேதனைகளுக்கும் வடித்த கண்ணீருக்கும் விரைவில் முடிவு காண்பதற்கான வாசல் திறக்கப்பட்டுள்ளதாகவே எண்ணத்தோன்றுகின்றது. இந்த மாற்றத்தை நீங்கள் கடைசிவரை இறுக்கமாக பற்றிக்கொண்டால் சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தை நிச்சயமாக ஒரு நிரந்தரமான அபிவிருத்தியுடைய தேசமாக கட்டியெழுப்ப  நாம் அயராது பாடுபடுவோம் என தெரிவித்தார்.

 8

9

Related posts:

உள்ளுராட்சித் தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்  ஐரோப்பியயூனியன் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் தேவானந்தா...
எதிரியை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை கொலை முயற்சி குற்றவாளி தொடர்பில் டக்ளஸ...
இரணைமடு குளத்தில் ஒரு இலட்சம் மீன்குஞ்சுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் விடப்பட்டது!