வேலணை வைத்தியசாலையை தள வைத்திசாலையாக தரமுயர்த்த வேண்டும் -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, December 7th, 2016

யாழ்ப்பாணத்தில் அரசமருந்தாக்கட் கூட்டுத்தாபனத்தின் ஒசுசல விற்பனை நிலையத்தை நாம் ஏற்கனவே நிறுவியுள்ள நிலையில்,அதற்குரிய இடவசதி கிடைக்காத காரணத்தினால் தற்போது அது யாழ் போதனா வைத்தியசாலையை அண்டியபகுதியில் அமையப் பெற்றில்லாததன் காரணமாக, அதன் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுவருவதாகக் கூறப்படுகின்றது. எமதுமக்களுக்கு மலிவான விலைகளிலும், இலகுவாகவும் மருந்து வகைகளைப் பெற்றுக் கொள்வதற்குவசதியாக இந்த நிறுவனத்தை யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.

கடந்த 05 ஆம் திகதி போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டுஉரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

மேலும்,யாழப்பாணத்தைப் பொறுத்தவரையில் தீவகப் பகுதிமக்களின் நன்மைகருதி தற்போது வேலணையில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலைக்கு மேலும் பலவசதிகளை மேற்கொண்டு அதனைத் தள வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுத்து உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன்,தற்போது இலவசஅம்புலன்ஸ் சேவைகள் தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றநிலையில்,பொதுமக்களுக்குஅதுதொடர்பானஅறிவுறுத்தல்கள் போதியளவில் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும்,

வீதிவிபத்துகள் ஏற்படுகின்ற நிலையில் விபத்துக்குட்படுகின்ற நபரை உடனடி மருத்துவசிகிச்சைக்கு உட்படுத்தும் வகையில் பொதுமக்களின் பங்களிப்புகள் இன்மையானது பொதுவாகக் காணக்கூடியதாக உள்ளது. சட்டத்திற்கு முன்னால் தாங்கள் நிற்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்கின்ற அச்சம் காரணமாக அவ்வாறான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளஎவரும் முன்வராதநிலையே காணப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சுடன் கலந்துரையாடி விபத்துகளுக்கு உட்படுகின்றநபரைஉடனடியாகஅங்கு கூடுவோரால் உரிய மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தும் முகமான ஒரு ஏற்பாட்டினை மேற்கொள்ளுமாறும், அதுதொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும்,

வடக்குமாகாணம் உட்படபலமாவட்டங்களில் போ~hக்குவழங்கும் திட்டத்தைஅரசும், ஏனைய அரசசார்பற்றசிலநிறுவனங்களும் மேற்கொண்டுவருகின்றபோதிலும்,அதுகுறித்தவிழிப்பூட்டல்கள் இன்மை காரணமாகமக்களால் அதனைப் பயன்படுத்த இயலாத நிலைகாணப்படுவதால், அதுதொடர்பில் உரியவிழிப்பூட்டல்களைமக்களுக்குஎற்படுத்தநடவடிக்கைஎடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-2 copy

Related posts:

ஊழல், மோசடிகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற கருத்துகள் யாவும் வெறும் அரசியல் பேசு பொருளாகவ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூசை வழிபாடுகள்!
உணவு பதனிடும் நிலையங்கள் அமைக்கப்படும் எனக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு என்ன நடந்தது? – எம்.பி டக்ள...