தீவகப் பகுதிகளில் வீட்டுத் தோட்டச் செய்கையாக தென்னை, மரமுந்திரி, பேரீட்சை போன்ற பயிர்கள் ஊக்கவிக்கப்படவேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, November 24th, 2017

தீவகப் பகுதிகளைப் பொறுத்தவரையில், வரட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையிலும் தென்னை, மரமுந்திரி, பேரீட்சை போன்ற பயிரினங்களை பண்ணை முறைமை ரீதியிலும் வீட்டுத் தோட்டச் செய்கைகள் என்ற ரீதியிலும் பயிரிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

அத்துடன், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இறப்பர் பயிர்ச் செய்கை மேற்கொள்வது குறித்து ஏற்கனவே பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அந்த ஏற்பாடுகள் தற்போது எத்தகைய நிலையில் இருக்கின்றன என்பது குறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் அறியத் தர வேண்டும். மேலும், இத்தகைய எற்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், தற்போது வறுமை நிலை அதிகம் கொண்டுள்ள அம் மாவட்டங்களின் மக்களுக்கு பொருளாதார ரீதியில் மிகுந்த நன்மை பயக்கக்கூடிய ஏற்பாடுகளே தேவை என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

Untitled-4 copy

Related posts:

வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் கடத்தலை முறியடிக்க இலங்கை - இந்திய அரசுகளின் கூட்டு நடவடிக்கை ...
அரசியலுரிமை பிரச்னைக்கான தீர்வு காலம் கடத்தி செல்வதை அனுமதிக்க முடியாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
‘நான்’ என்பதை ‘நாம்’ என மாற்றிட முடியுமானால் அதிகளவான பிரச்சினைகளுக்கு சுலபமாக தீர்வுகளை எட்டிட முடி...