எமது மக்களுக்கு ஒளிமயமானதொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் பொன்னான வாய்ப்பு இது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, August 22nd, 2020

வடக்கு மாகாணத்தில் ஏற்கனவே செயற்பட்டிருந்த கைத்தொழிற்துறைகளை மீள இயக்குவதற்கும் இதுவரையில் பயன்படுத்தப் பெற்றிராத வளங்களை உள்ளீர்த்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பொறிமுறைகளை வகுத்து புதிய கைத்தொழிற்துறைகளை ஏற்படுத்தியும் குடிசைக் கைத்தொழில்கள் சிறிய நடுத்தர மற்றும் பாரிய பரிமாண கைத்தொழில்கள் மென்பொருள் உற்பத்திகள் என  உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தையும் நாம் ஆரம்பிக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.

9 வது நாடாளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் இன்றையதினம் (21) நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் – எமது பகுதிகளிலே காணப்படுகின்ற ஏற்றுமதி தரம் கொண்ட இயற்கை வளங்களைக் கொண்டு பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்வதற்கும் அவற்றை பரவலாக்குவதற்கும் நாம் எதிர்பார்ப்பு கொண்டுள்ளோம் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆகவே எமது பகுதிகளை உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலமாக தன்னிறைவு காணச் செய்யும் எமது மக்களுக்கு ஒளிமயமானதொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு இதுவாகும்.

ஏற்கனவே கூட்டு சேர்ந்து எமது மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து எமது மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் செய்யாமல் வெறுமனே பதவி ஆசனங்களை தேய்த்துக் கொண்டிருந்துவிட்டு இப்போதும் அரசியல் பதவிகளுக்காக மாத்திரம் பிரிந்து நின்று எமது மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்தும் கூடவே வாக்கு கேட்ட சக வேட்பாளர்களை ஏமாற்றியும் அரசியல் பதவி ஏற்று மீண்டும் எமது மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் செய்யாமல் இருக்க நினைக்காமல் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் எமது பகுதிகளையும் முன்னேற்ற முன்வாருங்கள் என சக தமிழ் அரசியல் தலைமைகளுக்கு நான் மீண்டும் மீண்டும் பகிரங்கமாகவே அழைப்பு விடுப்பதுடன் என்பதுடன் எமது வெற்றியில் பங்கெடுத்துள்ள அனைத்து மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Related posts: