வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? – அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, December 8th, 2017

வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட பல  பகுதிகளில் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்ள இயலாத நிலை இருப்பதால் தொழில் உபகரணங்களை வழங்குவதோடு அதற்கான நிதி மானியங்கள் ஏதாவது கொடுக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டா? என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சர் சுவாமிநாதன் அவர்களிடம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்ளி எழுப்பியுள்ளார்.

இன்றையதினம் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் –

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள வலிகாமம் வடக்கு ஊறணி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மக்கள் மீள் குடியேற்றப்பட்டிருந்தனர். அந்த வகையில் தற்போது அங்கு 20 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்

ஆனாலும் இம் மக்கள் அப் பகுதியில் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வதற்கான தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு எவ்விதமான உபகரணங்களும் இன்றிய நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்த வருகின்றனர்.

குறித்த பகுதியில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டபோது அந்த மக்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. ஆனாலும் அம் மக்களுக்கு குறித்த உதவிகள் வழங்கப்பட்டனவா என்று டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்துடன் அவ்வாறு வழங்கப்பட்டிருப்;பின் தொழில் உபகரணங்கள் மற்றும் வசதிகள் பெறுகின்ற குடும்பங்கள் அவற்றைப் பயன்படுத்தி உரிய முறையில் தொழிற்றுறைகளில் ஈடுபடுகின்றனவா? என்பது குறித்து முன்னேற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts:


இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலைய...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் E.P.D.P.யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பி...
பொருட்களின் விலையேற்றங்கள் எமது மக்களின் நாளாந்த வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் விடுத்துள்ளது - டக்...