வன்னி மக்களின் இடர் துடைப்பேன் என்ற நம்பிக்கை இருபது வருடங்களுக்கு முன்னரே எனக்கு இருந்தது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 19th, 2020

என்றோ ஒருநாள் வன்னி மண்ணில் கால் பதிப்பேன். நான் நேசிக்கும் மக்களின் இடர் துடைப்பேன் என்ற நம்பிக்கை இருபது வருடங்களுக்கு முன்னரே எனக்கு இருந்தது. அதனடிப்படையிலேயே பத்து வருடங்களுக்கு முன்னர் எனது பிரதிநிதிகளை நியமித்து அவர்களின் ஊடாக பல்வேறு வேலைத் திட்டங்களை செயற்படுத்தியிருந்தேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி செல்வபுரம் மக்களுடனான சந்திப்பின்போது அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்தபின் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – இப்போது உங்கள் முன்பாக வந்திருக்கின்றேன். உங்கள் தேவைகள் அனைத்தையும் தீர்த்து வைக்க வேண்டியது எனது பொறுப்பு” அதை நான் நிச்சயம் நிறைவேன்றுவேன் என்றும் அந்த மக்களிடம் உறுதியாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கில் தென்பகுதி கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவும்! - டக்ளஸ் தேவானந...
காணிகளை கையகப்படுத்திக் கொண்டால் எமது மக்கள் வாழ்வது எங்கே? வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்வது எங்கே?
இழுவை மடி முறையில் இறால் பிடிக்கும் தொழில் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது ஆய்...