முன்னாள் போராளிகளை நான் பாதுகாப்பேன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்தி!

Thursday, February 2nd, 2017

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக முன்னாள் போராளிகள் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களுக்காக நான் நிச்சயம் குரல் கொடுப்பேன். உங்களது நியாயங்களை நான் நிச்சயம் பாதுகாப்பதுடன் உங்களது வாழ்வியலில் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை நிச்சயம் உருவாக்கி தருவேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சிலர்  படுகொலை செய்ய முயற்சித்ததாகவும்  இதில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்பு பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன..

குறித்த செய்திகளால் தமது எதிர்காலம் குறித்து அச்சமடைந்த சூழ்நிலையில் வாழ்ந்து வரும் முன்னாள் புலி போராளிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிக்கையில் –

குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் புலி உறுப்பினர்கள் பலர் என்னை தொடர்புகொண்டு தங்களை இதிலிருந்து பாதுகாக்குமாறும் தங்களை சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் வாழமுடியாத நிலைமையை சிலர் உருவாக்கி கொண்டிருக்கின்றார்கள் என்றும் அதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள உதவுமாறும் அதற்கான வழிகளை தங்களுக்கு காட்டுமாறு  என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அந்தவகையில் அவர்களது கருத்தக்களை நான் உள்வாங்கிக்கொண்டு பிரதமர் அவர்களோடும் ஜனாதிபதி அவர்களோடும் இது தொடர்பாக   கலந்துரையாடியிருக்கினன்றேன்.

உப்புத்தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பது போல இந்த செய்தி உண்மையா அல்லது பொய்யானதா என்பது விசாரணைகள் மூலம் தெரியவரும்.

அந்தவகையில் முன்னாள் பேராளிகள் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை இந்த புதிய அரசை பொறுத்தவகையில் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகின்றேன்.

அத்துடன் ஒரு உத்தரவாதத்தையும் அரசு சார்பாக நான் தராவிட்டாலும் அரசு மீது எனக்கு இருக்கக்கூடிய நம்பிக்கை மற்றும் ஜனாதிபதி அவர்கள் மீதும் பிரதமர் அவர்கள் மீது; நான் கொண்டிருக்கும் உறவுகள், தொடர்புகள் காரணமாக இவ்விடயம் தொடர்பாக நீங்கள் எவ்விதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பதுடன் உங்களுக்காக நான் நிச்சயம் குரல் கொடுப்பேன் என்றும் உங்களது நியாயங்களை நான் நிச்சயம் பாதுகாப்பதுடன் உங்களுக்கான ஒரு ஒளிமயமான எதிர்காலத்தையும் நான் நிச்சயம் உருவாக்கி தருவேன் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னாள் போராளிகளுக்கு விடுத்துள்ள விசேட செய்தியில் மேலுவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் தடுப்பு காவலில் இருந்த 12000 மேற்பபட்ட முன்னாள் போராளிகளை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அன்றைய அரசுடன் ஒரு இணக்கமான உறவை கொண்டிருந்தமையால் அவர்களை சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு  வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நந்திக் கடல் புனரமைப்பு செய்யப்படவேண்டும் - புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
ஐ.தே.மு - கூட்டமைப்பு கூட்டாட்சியில் யாழ்ப்பாணத்திற்கு அநீதி: விசாரணைக்கு அமைச்சரவையில் தீர்மானம் அம...
எரிபொருள் விலையேற்றத்தினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் அமை...