தொழிலுக்கான தடையை நீக்கித் தாருங்கள் – முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Friday, September 7th, 2018

சுருக்குவலை மீன்பிடிமுறை தடை செய்யப்பட்டுள்ளதால் தமது தொழில்வாய்ப்பு முடக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதார நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அவல நிலையிலிருந்து மீள்வதற்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேதவானந்தா அவர்களை குறித்த மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

கடும் யுத்தத்திற்கு முகங்கொடுத்து பல வேதனைகளை சுமந்த எமது பகுதி மக்கள் தற்போது தான் ஓரளவு வாழ்வாதார நிலையில் மாற்றங்கண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது எமது வாழ்வாதார தொழிலாக இருந்துவந்த சுருக்குவலை தொழில் தடைசெய்யப்பட்டுள்ளதால் இதையே நம்பி வாழ்ந்த எமது குடும்ப நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இந்நிலையில் எமது தொழில்வாய்ப்பையும் பொருளாதாரத்தையும் உறுதி செய்வதற்கும் ஏதுவாக குறித்த பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட செயலாளர் நாயகம் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் விஜயமுனி சொய்ஷா அவர்களுடன் கலந்துரையாடியதுடன் காலக் கிரமத்தில் துறைசார் குறித்த பிரச்சினைக்குரிய தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

41286834_268709333748320_1782383192724996096_n 41271535_263339601173497_4769514491618525184_n 41170207_682971848768924_415666964971651072_n

Related posts: