நிறுவனமும் சூழலும் வலுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் – குருநகர் உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 7th, 2020

யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள உயர் தொழில் நுட்பவியல் கல்லூரியின் செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களுடன் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த நிகழ்வு இன்றையதினம் (7) குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் கோகிலன் தலைமையில் நடைபெற்றது.

நிறுவனத்தின் தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்ட அமைச்சர் உரையாற்றுகையில் –

நிறுவனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதன் தேவைப்படுகள் தொடர்பாகவும் இங்குபணிபுரியும் துறைசார் உத்தியோகத்தர்களது கருத்துக்களூடாக அறிந்துகொள்ள முடிகின்றது. அவை ஒவ்வொன்றும் நியாயமான கோரிக்கைகள்தான்.

கடந்த காலங்களில் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நாம் எமது கட்சியின் நிதியைக்கூட வழங்கியுள்ளோம்.

நாளாந்தம் என்னிடம் பலதரப்பட்ட கோரிக்கைகள் வந்தவண்ணமே இருக்கின்றது.

நான் எமது மக்களின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படுவதற்கான முயற்சிகளையே நாளாந்தம் முன்னெடுத்து வருகின்றேன்.

இன்நிறுவனத்தின் பிரச்சினைகள் ஒவ்வொன்றும் தீர்க்கப்பட கூடியவை. தீர்வுகாணக் கூடியவைதான்.

ஆனாலும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களதும் உங்களது சமூகம் சார்ந்தும் சிந்தித்து தெளிவுற்று உங்கள் அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் என்பதே இன்றைய தேவையாக உள்ளது.

நான் அரசியல் பேசுவதாக எண்ண வேண்டாம். ஒவ்வொரு அரியல் முடிவுகளிலும்தான் எமது மக்களினதும் பிரதேசத்தினதும் அசைவுகள் ஒவ்வொன்றும் இருக்கின்றது. இதுதான் உண்மை.

மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற தூய எண்ணத்துடன் நான் மட்டும் நாடாளுமன்றம் செல்வதனூடாக தீர்வுகளை காண முடியாது. என்னுடன் இன்னும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வார்களானால் என்னால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முடியுமான அளவு தீர்வுகண்டுதர் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

நான் அன்று சொன்னதே யதார்த்தம். அதுவே இன்று நடந்தேறியுள்ளது. இன்றும் அவ்வாறே உள்ளது. இனியும் நான் கூறும் விடயங்களே நடந்தேறும் .

அதை வெற்றிகொள்ள செய்யும் பலம் மக்களாகிய உங்களிடமே உள்ளது.இதை உணர்ந்து நீங்கள் வரவுள்ள அரியல் சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பதே அவசியமாகும் என்றார்.

இதனிடையே –

நிறுவனமும் அழகாக வேண்டும் சூழலும் அழகாக வேண்டும். அதற்கான முயற்சிகளை முடியுமானவரை இந்நிறுவனம் மேற்கொண்டு வந்தாலும் இன்னமும் மேம்பாடுகண்டு தொழில்துறை சார் நிபுணத்துவம் மிக்க மாணவர்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்

கடந்த காலங்களில் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய பங்கு ஏராளம்.

தற்போது சுமார் 2300க்கும் அதிக மாணவர்கள் இந்நிறுவனத்தில் கல்லி கற்று வருவதுடன் வருடா வருடம் நூற்றுக்கணக்கான மானவர்கள் தொழில் துறை கல்வியை நிறைவு செய்து வெளியேறுகின்றனர்.

ஆனாலும் அவர்களதுதொழில் நிலை கல்வித் தகைமைகளுக்கேற்ப தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை.

அந்தவகையில் கல்விக்கேற்ற தொழில் நிலைகளை உருவாக்கி கொடுப்பது அவசியம்.

அத்துடன் நிறுவனத்தில் கட்டட வசதி குறைவு, துறைசார் போதனாசிரியர்கள் பற்றாக்குறை, நிதி வள பற்றாக்குறையும் பாரிய பிராசினையாக உள்ளது.
இவற்றுக்கான தீர்வை பெற்று தருவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் கோரிக்கை விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: