வீட்டு நன்னீர் மீன்வளர்ப்பு திட்டத்தை ஊக்கவிக்க சமுர்த்தி வங்கிகளூடாக விஷேட சுயதொழில் கடன் திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, December 24th, 2019


கிராமப்புறங்களில் வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்வது போன்று நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதற்காக சமுர்த்தி வங்கிகளூடாக சுயதொழில் கடனுதவியை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கிராமப்புறங்களில் வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்வது போன்று தமது வாழிடங்களில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை ஊக்குவிப்பதற்காகவும் இளைஞர்களிடையே சுயதொழில் முயற்சியை உருவாக்கி பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கும் வகையிலும் இந்த கடனுதவி திட்டம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

குறித்த சுயதொழிலை மேற்கொள்ள விரும்பும் ஒருவர் தான் வாழும் சுற்றத்தில் நன்னீர் மீன் வளர்பை மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதற்கான கருத்திட்டங்களை தயாரித்து சமுர்த்தி வங்கியில் இந்த சுயதொழில் கடனுதவியை கோர முடியும்.

இத்திட்டத்தை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு  கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சு மானிய அடிப்படையில் மீன் குஞ்சுகளையும் பயிற்சிகளையும் வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சுயதொழில் முயற்சியாக வீட்டு நன்னீர் மீன் வளர்ப்பை மேற்கொள்பவர்களுக்கு சமுர்த்தி வங்கியூடாக 50 ஆயிரத்திலிருந்து 10 இலட்சம் ரூபாவரை கடனுதவியை பெற்றுக்கொள்ளவும் முடியும் என்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: