அத்துமீறும் கடற்றொழில் நடவடிக்கைகளை ஏற்க முடியாது – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Monday, August 26th, 2019


எமது மக்களின் தொழில் நடவடிக்கைகளை யார் சீர்குலைத்தாலும் அதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய செயற்பாடுகளை யார் முன்னெடுத்தாலும் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடமராட்சி கடல் பகுதியில் அண்மையில் சட்டவிரோதமான முறையில் வேறு மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் றோலர் படகுகளில் வந்து தொழில் நடவடிக்கைளை மேற்கொண்டமையால் எமது பிரதேச கடற்றொழிலாளர்களது வலைகள் பல அழிவடைந்துள்ளன. அதனால் இருதரப்பினருக்கும் இடையே குழப்பமான நிலையும் உருவானது.

இவ்வாறு வேற்று பகுதி கடற் தொழிலாளர்கள் எமது பகுதி கடலில் சட்டவிரேதமாக தொழில் செய்வதால் எமது வழங்கள் மட்டுமல்லாது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரமும் அழிவடைந்து செல்லும் நிலை காணப்படுகின்றது.

இத்தகைய நிலை இனியும் தொடராதிருக்க வேண்டும். நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்த போது இவ்வாறான நிலைமைகளுக்கு அனுமதித்திருக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அபிவிருத்...
அமைச்சர் ரமேஸ் பத்திரனவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை - யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிருத்திக் கூட்டு...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - எல்லை தாண்டும் இந்திய மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சியளிக்க...