கடற்றொழில் திணைக்களத்தின் விற்பனையை அதிகரிப்பதற்கான வழிவகைகளை மேலும் விஸ்தரிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Tuesday, August 23rd, 2022


……
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் மற்றும் மீன் விற்பனை நிலையங்களின் அன்றாடச் செயற்பாடுகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து,  கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எடுத்துரைத்தார்.

கடற்றொழில் திணைக்களத்தின் விற்பனையை அதிகரிப்பதற்கு சாத்தியமான வழிவகைகளை மேலும் விஸ்தரிக்குமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திருகோணமலையில் அமைந்துள்ள கடற்றொழில் திணைக்களத்தின் மீன் சந்தையை விஸ்தரிப்பது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் அமைச்சரின் ஆலோசகர் மற்றும் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர். – 23.08.2022

Related posts:

கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவா...
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் அமைச்சர...