கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 24th, 2018

கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் அமைக்கப்பட்டு ஆரம்பக் கட்டப்பணிகளோடு கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பேருந்து தரிப்பிடத்தை மக்களின் வேண்டுகோளிற்கிணங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்டத்தின் பல பொது அமைப்புகளையும் பொது மக்களையும் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிந்து கொண்டார்.

இதன்போது கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம் ஆரம்பக்கட்டப்பணிகளோடு கைவிடப்பட்டதையும் சேறும் சகதியுமாக அவ்விடம் காணப்படுவதால் நடத்துனர்களும் பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் அதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் கிளிநொச்சி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மக்களது கோரிக்கைக்கு இணங்க குறித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளிடம் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் காலக்கிரமத்தில் அதன் பணிகளைப் பூர்த்தி செய்து மக்களது பாவனைக்கு ஏற்ற வகையில் குறித்த பேருந்து நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

3

1

5

4

6

8

9

7

Related posts:

நிலைமாறுகால நீதி நாட்டுக்கு வருமோ தெரியாது ஆனால் நிலைமாறாகால அநீதி எப்போதும் ஓயாது – நாடாளுமன்றில் ட...
எங்கள் ஒளிவிளக்கு டக்ளஸ் தேவானந்தா !யாழில் அலுவலகத்தை திறந்துவைத்து முஸ்லிம்கள் புகழாரம்!
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாட...

30 ஆம் திகதிய இலங்கை - இந்திய துறைசார் தரப்புக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தொடர்பாக முன்னேற்பாட்டி...
2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்யும் தேசிய வேலைத் திட்டம் – மன்னார் மாவட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் டக...
எத்தகைய சவால்கள் ஏற்படினும் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுங்கள்:- திணைக்களங்களின் பிரதானிகளுக்க...