அமரர் ஐ.தி.சம்பந்தன் மறைவுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Thursday, May 5th, 2022

அண்ணர் ஐ.தி. சம்பந்தன் அவர்களின் இழப்புச்செய்தி  அதிர்ச்சியையும்,. ஆழ்மனத்துயரையும் தந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்..

அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அஞ்சலி குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளால்.

குறித்த அஞ்சலி குறிப்பில் – தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைக்கான பயணத்தில் நான் வேறு, அவர் வேறு என இரு வேறு பாதையில் பயணித்திருந்தாலும்,.. எழுபதாம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் அண்ணர் ஐ.தி. சம்பந்தன் அவர்கள்கொழும்பில் இருந்து ஆற்றிய மக்கள் பணிகளை நான் நேரில் கண்டவன்.

சமூக,. இலக்கிய,. ஆன்மீக, அரசியல் பணிகளில் ஆழமான ஈடுபாடு கொண்டவர்,.. குறிப்பாக,. 77 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவர  வன்முறை சூழலின் போது,..

எனது பெரிய தந்தையாரும், மாபெரும் தொழிற்சங்க வாதியுமாகிய அமரர் கே.சி.நித்தியானந்தா அவர்களினால் அவலப்பட்டு நின்ற தமிழ் மக்களை காப்பாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தில் (ரி.ஆர்.ஆர்.ஒ) அண்ணர் ஐ.தி. சம்பந்தன் அவர்கள் வீரியமுடன் இணைந்து செயலாற்றிய நாட்களை  நினைத்துப்பார்க்கிறேன்.

அந்த அமைப்பில் அவருடன் இணைந்து நானும் களப்பணியாற்றிய அந்த காலச்சூழல் இன்னமும் என் கண் முன்னே நிற்கிறது,. அவரது இழப்பின் துயரால் வதை படும் பிள்ளைகள்,. உறவினர்கள், ஊரவர்கள், நண்பர்களுக்கு ஆறுதல் கூறுகின்றேன். என்றும் அவரது நினைவுகள் எம்முடன் வாழட்டும். ஆழ்மன அஞ்சலி மரியாதை தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000                     

Related posts:

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதங்கள் மௌனித்திருக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
பலாலி விமான நிலையத்தை சீர் செய்து வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் -...
காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்ச...