பாசையூ கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கட்சி நிதியிலிருந்து உதவித் திட்டம் வழங்கிய அமைச்சர் டக்ளஸ்!

Thursday, April 18th, 2024

பாசையூ கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டை அடிப்படையாக கொண்டு அவர்களது தொழில் நடவடிக்கைகளுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கட்சியின் நிதியிலிருந்து முதற்கட்டமாக சுமார் 50 கடற்றொழிலாளர்களுக்கு 30 ஆயிரம் ரூபா பொறுமதியான வலைகளை வழகிவைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்றையதினம் (2024.04.18) பாசையூ கடற்றொழிலாளர் சங்கத்தில் இடம்பெற்றது.

சுமார் 700 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களை உள்ளடக்கிய குறித்த பாசையூ கடற்றொழிலாளர் சங்கத்தினர் தமது தொழில் நடவடிக்கைகளில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் கொண்டுசென்றிருந்தனர்.

இதையடுத்து குறித்த தரப்பினரது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வாழ்வாதார பொருளாதார ஈட்டலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பொருளாதார ரீதில் மிகவும் பாதிப்பு நிலையிலுள்ள 350 கடற்றொழிலாளர்களின் நலன்களை கருத்திற்கொண்டு தலா 30 ஆயிரம் ரூபா பெறுமதியான வலைகளை தனது கட்சியின் நிதியிலிருந்து கொள்வனவு செய்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதனடிப்படையிலேயே முதற்கட்டமான 50 கடற்றொழிலாளர்களுக்கு இன்றையதினம் 30 ஆயிரம் ரூபா பெறுமதியிலான வலைகள் அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் எஞ்சிய 300 கடற்றொழிலாளர்களுக்கும் விரைவில் குறித்த பெறுமதியிலான வலைகளை வழங்குவதற்கு எற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்

இதன்போது குறித்த கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள எரிபொருள் தாங்கி ஒன்றை தமது பகுதியில் அமைப்பட வேண்டும் என்றும் அதற்கான காணி இன்மையால் அதற்கும் ஏற்பாடு செய்துதருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கோரிக்கையின் தேவைப்பாட்டை கருத்திற்கொண்ட அமைச்சர் குறித்த பகுதியில் அதற்கான அமைவிடம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்துடன் அதற்கான சட்டரீதியிலான நடவடிக்கைகளை குறித்த பிரதேசத்தின் கிராம அலுவலரை மேற்கொள்ளுமாறும் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: