சபரிமலை யாத்திரையை புனிதயாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Saturday, November 17th, 2018

ஐயப்பசுவாமிகளின் சபரிமலைக்கான யாத்திரையை புனிதயாத்திரையாகப் பிரகடனப்படுத்தி அங்கீகரிக்கவேண்டும் என்றும், இந்திய நுழைவுக் கட்டணம் (வீசா) இன்றி இலவசமாகப் பயணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கொம்பனித்தெரு ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஐயப்ப யாத்திரைக் குழுவினர் விடுத்த கோரிக்கையை மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிறைவேற்றித்தருவதாக தெரிவித்தார்.

சிங்கள மக்கள் தம்பதீவுக்கு புனிதயாத்திரைப் பயணமாக செல்வதைப் போன்று, இஸ்லாமியர்கள் புனித மக்காநகருக்குச் செல்வதைப் போன்று, சபரிமலைக்கு புனிதயாத்திரை சென்றுவருவதற்கு அங்கீகாரமும், இலகுவான வழிமுறைகளும் ஏற்படுத்தித் தருவதற்கு இந்துமத அலுவல்கள் அமைச்சர் என்றவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உதவி செய்யவேண்டும் என்று ஐயப்ப யாத்திரைக் குழுவினர் விடுத்தகோரிக்கையின் நியாயத்தை புரிந்துகொள்வதாகவும், இந்தியநுழைவுக்கான (வீசா) கட்டணம் அறவிடப்படாது இலவசமாக நுழைவு அனுமதி பெற்றுத்தரப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது இந்தமத அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் திரு உமாமகேஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

46346336_1429492070526831_1550073423911190528_n

46377020_717078088685645_602216331147739136_n

46380947_257610858257528_2076579656407973888_n

46387791_259560884726530_4435605922798108672_n

46398518_2160693817315657_8940347277029933056_n

46514010_266116354251625_1923513000573009920_n

Related posts:


பயணிகளது நலன் கருதி அனைத்து புகையிரத நிலையங்களிலும் தமிழ் மொழியிலும் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் -...
பியரின் விலைகுறைப்பு இளவயதினரின் மதுப்பழக்கத்தை அதிகரிக்கும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மகத்தான வரவேற்பு: ஈ.பி.டி.பியின் வழிமுறை நோக்கி வட்டுக்கோட்டையில் அண...